அநாதி சிநேகத்தால் என்னை நேசித்தீரையா
காருண்யத்தினால் என்னை இழுத்துக்கொண்டீரே
அன்பு பெரியது இரக்கம் பெரியது
கிருபை பெரியது தயவு பெரியது
அநாதையாய் அலைந்த என்னை தேடிவந்தீரே
அன்பு காட்டி அரவணைத்து காத்து கொண்டீரே
நிலையில்லாத உலகத்தில் அலைந்தேனய்யா
நிகரில்லாத இயேசுவே அணைத்துக்கொண்டீரே
தாயின் கருவில் தோன்றுமுன்னே தெரிந்து கொண்டீரே
தாயைப்போல ஆற்றித் தேற்றி நடத்தி வந்தீரே
நடத்தி வந்த பாதைகளை நினைக்கும் போதெல்லாம்
கண்ணீரோடு நன்றி சொல்ல துதிக்கிறேனய்யா
கர்த்தர் செய்ய நினைத்தது தடைபடவில்லை
சகலத்தையும் நன்மையாகச் செய்து முடித்தீரே