அழைத்தவர் உன்னை நடத்திச்செல்வாரே கலங்காதே
கலங்காதே மனம் கலங்காதே
அழைத்தவர் உன்னை நடத்திச் செல்வாரே
கலங்காதே நீ கலங்காதே
1. செங்கடலும் உன்னைக் கண்டு அலைபுரண்டு வந்தாலும்
யோர்தானும் உன்னகை; கண்டுகரை புரண்டு வந்தாலும்
கலங்காதே மனம் திகையாதே
அழைத்தவர் உன்னை
நடத்திச் செல்வாரே
கலங்காதே நீ கலங்காதே
2. சிங்கத்தின் கெபிக்குள்ளே உன்னைத்தூக்கிப் போட்டாலும்
எரிகின்ற சூளையிலே உன்னைத்தூக்கிப் போட்டாலும்
கலங்காதே மனம் திகையாதே
அழைத்தவர் உன்னை விடுவிப்பாரே
3. யேசபேலும் உன்னைக் கண்டு எதிர்த்து வந்தாலும்
ஆமானும் உன்னைக்கண்டு கலகம் தான் செய்தாலும்
கலங்காதே மனம் திகையாதே
அழைத்தவர் உன்னை உயர்த்திடுவாரே
4. எரிகோவும் உன்னைக் கண்டு எதிர்த்து நின்றாலும்
வெள்ளம் போல சாத்தானும் உன் எதிரே வந்தாலும்
கலங்காதே மனம் திகையாதே
அழைத்தவர் உனக்கு உதவி செய்வாரே
5. கேரீத்தும் உன்னைக் கண்டு வற்றிதான் போனாலும்
காகம் உனக்கு அப்பம் தான் கொடாமல் போனாலும்
கலங்காதே மனம் திகையாதே
அழைத்தவர் உன்னை போஷிப்பரே