அன்பரென் நேசரே உம்மண்டையில்
இன்பமாக உந்தன் பாதையோட
நீரே வழியும் சத்தியமும் ஜீவனுமே
2. துன்பப் பெருக்கிலே சோர்ந்திடேனே
அன்பரறியாமல் வந்திடாதே
கண்மணி போல் நீர் காத்திடுவீர் கனிவுடன்
3. சுற்றிலும் சத்துரு சூழ்ந்திடினும்
வியாகுலம் என்னை விரட்டிடினும்
ஆ! நேசரே உம் இன்ப சத்தம் ஈந்திடுவீர்
4. ஈனச் சிலுவையில் ஏறிட்டீரோ
எந்தனுக்காய் கஷ்டப் பட்டிட்டீரோ
துன்ப மூலமாய் எய்திடுவேன் இன்ப கானான்
5. சொந்த ஜீவனை நீர் என்னிலீந்து
அன்பிலணைத்தீரே வல்லமையாய்
எந்தன் ஜீவனை மற்றோருக்காய் ஈந்திடவே
6. மாயையான இந்த லோகமதில்
மாய்ந்தழியும் இந்த மாந்தரன்பு
நேற்றும் இன்றென்றும் மாறிடீரே என் நேசரே
7. வஞ்சனையான இப்பார்த்தலமே
வஞ்சிக்குமே மிகத் தந்திரமாய்
வாஞ்சித்திடேனே மோசமான இப்பார்த்தலத்தை