அன்பின் சமூகமே இறை
அருளின் திருக்கூட்டமே
பேதமில்லாதே கூடுவோம் – அருள்
வேதத்தின் வாக்கிலே வாழுவோம்
அல்லேலூயா பாடி நாம் ஆர்ப்பரிப்போம்
அல்லேலூயா பாடி நாம் மகிழ்ந்திடுவோம்
1. தந்தை மகன் தூய ஆவியென
இறைவன் உறவுடன் வாழ்கின்றார்
சிந்தையும் செயலும் ஒருங்கிணைந்த
திரித்துவ சமூகத்தைப் போற்றிடுவோம் – 2
2. அனைவரும் குடும்பமாய் கூடிடுவோம்
ஒருள்ளம் ஒருமனம் கொண்டு வாழ்வோம்
தேவையில் உடமையைப் பகிர்ந்திடுவோம்
சேவையில் தினம் நம்மைத் தந்திடுவோம் – 2
3. எல்லோர்க்கும் நண்பராய் ஆகிடுவோம்
பொல்லார்க்கும் நன்மையே செய்திடுவோம்
மன்னித்து மறந்தே வாழ்ந்திடுவோம்
மங்காத அன்பிலே மிளிர்ந்திடுவோம் – 2