ஆராதனை நாயகரே
உம்மை நான் ஆராதிப்பேன்
அபிஷேகத்தைத் தருபவரே
உம்மை நான் ஆராதிப்பேன்
அல்லேலூயா
ஆமென்
அன்பரும் நீரே ஆதாரம் நீரே
உம்மை நான் ஆராதிப்பேன்
இன்பமும் நீரே ஈடில்லா நேசரே
உம்மை நான் ஆராதிப்பேன்
உண்மையும் நீரே ஊக்கமும் நீரே
உம்மை நான் ஆராதிப்பேன்
எண்ணமும் நீரே ஏக்கமும் நீரே
உம்மை நான் ஆராதிப்பேன்
ஐந்து காயம் ஏற்றவர் நீரே
உம்மை நான் ஆராதிப்பேன்
ஓங்கிய புயமும் ஒளஷதம் நீரே
உம்மை நான் ஆராதிப்பேன்