ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன் 2
ஆனந்த சத்தத்தோடே ஆராதிப்பேன் 2
பரிசுத்த அலங்கார துதியுடனே
தேவனின் சந்நிதிக்கு வந்திடுவேன்
1. கல்வாரி மலையில் என் கடனை தீர்த்தார்
கன்மலையின் நீருற்றால் தாகம் தீர்த்தார்
பரிசுத்த ஆவியால் நிறைய செய்தீர் – ஆராதிப்பேன்
2. பாடி ஆடி ஆவியில் மகிழ்ந்திடுவேன்
பல பாஷை சொல்லி துதித்திடுவேன்
பக்தி யுக்தி என்னில் அடைந்திடவே – ஆராதிப்பேன்
3. ஆசையோடு தொழுதிடும் அடியவர்க்கு
ஆசீர் வாத மழை இன்று பொழியட்டுமே
ஆத்தும தோட்டம் செழிக்கட்டுமே – ஆராதிப்பேன்
4. அபிஷேகம் அருளிச் சுத்திகரியும்
ஆவியின் அக்கினியால் தீக் கொளுத்தும்
வேதத்தின் பொருளை விளங்கச் செய்யும் – ஆராதிப்பேன்