இயேசுவின் இரத்தத்தாலும்
தேவனின் கிருபையாலும்
மீட்கப்பட்டோர்கள் ஆனந்தம்
பாடி ஆண்டவருடன் சேருவார்
1. மேகத்தில் எக்காளமே – இயேசு
வருகையில் தொனித்திடுமே
அன்பருடன் அவர் பக்தர் பலர்
ஆயத்தமாய் வருவார் – இயேசுவின்
2. அத்தி மரம் துளிர்க்குதே – அந்த
புத்திரர் இஸ்ரவேலர்
பத்திரமாக கூடிச் சேர – வேத
சத்தியம் நிறைவேறுதே – இயேசுவின்
3. ஜொலிக்கும் நட்சத்திரங்கள் – பல
வீழ்கின்ற நாளிதுவே
பாவத்தை வெறுத்து பயத்தோடே ஜீவித்து
இயேசுவை பின் செல்லுவோம் – இயேசுவின்
4. தூதனின் கரங்களில் – ஓர்
கோப கலசத்தைப் பார்
ஐயோ என்றொரு தொனி கேட்குதே
ஐங்கண்டங்கள் எங்குமே – இயேசுவின்
5. காலம் இனி செல்லாதே – கர்த்தர்
இயேசு வருகின்றாரே
ஆவியும் அவர் மணவாட்டியும்
கூவி அழைத்திடுவார் – இயேசுவின்