இயேசுவின் நாமம் ஏறெடு, வருத்தப்பட்டோனே நீ சந்தோஷம் உன்னை ஆட்
1. இயேசுவின் நாமம் ஏறெடு,
வருத்தப்பட்டோனே நீ
சந்தோஷம் உன்னை ஆட்கொள்ளும்
எங்கு நீ சென்றாலுமே.
மீட்பரின் நாமமே
உலகத்தின் நாமமே
மீட்பரின் நாமமே
பரலோக சந்தோஷம்.
2. இயேசுவின் நாமம் ஏறெடு
அதாபத்தில் கேடகம்
சோதனைகள் சூழும் போது
அவரை நோக்கி ஜெபி.
3. விலையேறப்பெற்ற நாமம்,
என் உள்ளத்தில் சந்தோஷம்
அவர் என்னைச் சேர்க்கும் போது
அவர் துதி என் நாவில்.
4. நம் பிராயாணம் ஓயும்போது,
ராஜனாய் முடி சூட்டி
அவரின் பாதம் பணிவோம்
நீடுழி நாட்களாக.