மாணவா் ஞாயிறு
தென்னிந்தியத் திருச்சபை
கன்னியாகுமரிப் பேராயம்
கிறிஸ்தவக் கல்வி வளா்ச்சித்துறை
மாணவா் ஞாயிறு
சிறப்புத் தொழுகை
07-06-2026
கருப்பொருள்
Jesus The Ultimate Influencer
வரவேற்பு:
தூய ஆவியார் என்னும் மூவொரு கடவுளின் திருப்பெயா் வாழ்த்தப்பெறுவதாக! 2026-ஆம் ஆண்டின் மாணவா் ஞாயிறு சிறப்புத் தொழுகையில் பங்கேற்கும்படியாய் வருகை புரிந்திருக்கின்ற இறைமக்கள்
அனைவரையும் இறைமைந்தன் இயேசு கிறிஸ்துவின் இனிய பெயரில் வாழ்த்தி வரவேற்றுக் கொள்கிறோம். நாம் அனைவரும் எழுந்து நன்றியுள்ள இருதயத்தோடே கடவுளைத் தொழுவோமாக!
இறைப்புகழ்ப்பா:
1. யேசு கற்பித்தார் ஒளி வீசவே,
சிறு தீபம்போல இருள் நீக்கவே;
அந்தகார லோகில் ஒளி வீசுவோம்.
அங்கும் இங்கும் எங்கும்
பிரகாசிப்போம்.
2. முதல் அவர்க்காய் ஒளி வீசுவோம்;
ஒளி மங்கிடாமல்
காத்துக் கொள்ளுவோம்;
இயேசு நோக்கிப் பார்க்க
ஒளி வீசுவோம்.
அங்கும் இங்கும் எங்கும்
பிரகாசிப்போம்.
தொழுகைக்கு அழைப்பு:
ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.
ஆண்டவர் நமக்குக் காட்டும் மாறாத அன்பு மிகப் பெரியது;
அவரது உண்மை என்றென்றும் நிலைத்துள்ளது. ஆண்டவரே நான் உமது திருச்சட்டத்தின் மீது எத்துணைப் பற்றுக்கொண்டுள்ளேன். நாள் முழுவதும் அதைப்பற்றியே சிந்திக்கின்றேன்.!
நம் கடவுளாகிய ஆண்டவரைப் பெருமைப்படுத்துங்கள்; அவரது அரியணைமுன் தாள்பணிந்து வணங்குங்கள்.
தொடக்க இறைவேண்டல்:
ஞானத்தை அனைவருக்கும் தாராளமாக வழங்குகின்ற எங்கள் தாயும் தந்தையுமாகிய அன்புக் கடவுளே, 2026-ஆம் ஆண்டின் மாணவர் ஞாயிறு சிறப்புத் தொழுகையில் பங்குபெறவும்,
உம்மைப் பணிந்து கொள்ளவும், உமது வாக்கினால் ஆற்றல்படுத்தப்பெறவும் நீர் தந்த வாய்ப்புக்காக உமக்கு நன்றி படைக்கின்றோம். உம் அருளால் ஒரு கல்வியாண்டை நிறைவு செய்து புதிய கல்வியாண்டில்
நுழைந்திருக்கின்ற நாங்கள் வாழ்வருளும் உமது வழிகாட்டுதலை பெறவும், ஞாலம் போற்றும் உமது ஞானத்தை உடைமையாக்கிக்
கொள்ளவும் நாடுகின்றோம். எங்கள் எதிர்நோக்குகளும்
இலட்சியங்களும் நிறைவேறட்டும். இத்தொழுகையில் உமது உடனிருப்பை உணரவும், உமது உந்துதலை ஏற்று எமை நின் திருக்கரத்தில் ஒப்படைக்கவும் அருள்தாரும். உம்முடைய கற்பிதங்களின் வாயிலாக
இறையாளுகையின் தகவுகளில் வளர்ந்து, நற்பண்புகளால் எங்கள் வாழ்வை அணிசெய்து, உமக்குச் சான்றுகளாய் இலங்கிடத் துணை செய்தருளும். ஆண்டவரும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவின்
வழியாக மன்றாடுகிறோம் நல்ல கடவுளே, ஆமென்.
ஞானப்பாடல் : 482
1 யேசு எந்தன் நேசரே,
கண்டேன் வேத நூலிலே;
பாலர் அவர் சொந்தந்தான்,
தாங்க அவர் வல்லோர்தான்.
யேசு என் நேசர்,
யேசு என் நேசர்,
யேசு என் நேசர்,
மெய் வேத வாக்கிதே.
2. என்னை மீட்க மரித்தார்,
மோட்ச வாசல் திறந்தார்
எந்தன் பாவம் நீக்குவார்,
பாலன் என்னை ரட்சிப்பார்.
யேசு என் நேசர்,
யேசு என் நேசர்,
யேசு என் நேசர்,
மெய் வேத வாக்கிதே.
3 பெலவீனம், நோவிலும்
என்றும் என்னை நேசிக்கும்
இயேசு தாங்கித் தேற்றுவார்,
பாதுகாக்க வருவார்.
யேசு என் நேசர்,
யேசு என் நேசர்,
யேசு என் நேசர்,
மெய் வேத வாக்கிதே.
4 எந்தன் மீட்பர் யேசுவே,
தங்குவார் என்னருகே;
நேசனாய் நான் மரித்தால்,
சேர்ப்பார் அன்பினால்.
யேசு என் நேசர்,
யேசு என் நேசர்,
யேசு என் நேசர்,
மெய் வேத வாக்கிதே.
முறைமுறையாகப் படித்தல்:
நடத்துநர் : ஞானம் தனக்கு ஒரு வீட்டைக் கட்டியிருக்கின்றது; அதற்கென ஏழு தூண்களைச் செதுக்கிருக்கின்றது.
இறைமக்கள் : ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே ஞானத்தின் தொடக்கம்; தூயவராகிய அவரைப்பற்றிய உணர்வே மெய்யுணர்வு.
நடத்துநர் : “அறியாப் பிள்ளைகளே, இங்கே வாருங்கள்” என்று அறிவிக்கச் செய்து; மதிக்கேடருக்கு அழைப்பு விடுத்தது.
இறைமக்கள் : ஆண்டவருக்கு அஞ்சுவது தீமையைப் பகைக்கச் செய்யும்; ஆணவத்தையும் இறுமாப்பைபும் தீமையையும் உருட்டையும் புரட்டையும் நான் விரும்புகிறேன்.
நடத்துநர் : பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்; என் வழிகளைப் பின்பற்றுகின்றோர் நற்பேறு பெற்றோர்.
இறைமக்கள் : பொய் வழியை என்னைவிட்டு விலக்கியருக்கும், உமது திருச்சட்டத்தை எனக்குக் கற்றுத்தரும்.
நடத்துநர் : பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்; நான் சொல்வதைக் கவனியுங்கள்.
இறைமக்கள் : நீர் என் அறிவை விரிவாகும்போது உம் கட்டளைகள் காட்டும் வழியில் நான் விரைந்து செல்வேன்.
நடத்துநர் : பிள்ளைகளே! தந்தையின் போதனைக்குச் செவிசாயுங்கள்; மெய்யுணர்வை அடையும்படி அதில் கவனம் செலுத்துங்கள்.
இறைமக்கள் : உம் விதிமுறைகளை நான் கடைப்பிடிப்பேன்; என்னை ஒருபோதும் கைவிடவிடாதேயும்.
அனைவரும் : நீ எதைச் செய்தாலும் ஆண்டவரை மனத்தில் வைத்துச் செய்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செம்மையாக்குவார்.
முவொரு கடவுளைப் போற்றுதல்: (மகிமையின் கவி)
பிதாவும், குமாரனும் பரிசுத்த ஆவிக்கும்
மகிமை உண்டாவதாக!
ஆதியிலும் இப்பொழுதும் எப்பொழுதும் சதாகாலங்களிலும்
மகிமை உண்டாவதாக! ஆமென்!
பிழை உணர அழைப்பு:
என் பிள்ளைகளே, நீங்கள் பாவம் செய்யாதிருக்க வேண்டும் என இதை நான் உங்களுக்கு எழுதுகிறேன்; ஆயினும் ஒருவர் பாவம் செய்ய நேர்ந்தால் தந்தையிடம் பரிந்து பேசுபவர் ஒருவர் நமக்கு இருக்கிறார்.
அவரே மாசற்ற இயேசு கிறிஸ்து. பாவங்களை நீக்கவே அவர் தோன்றினார் என்பது உங்களுக்குத் தெரியும். அவரிடம் பாவம் இல்லை. ஆனால் பாவம் நம்மிடம் இல்லை என்போமென்றால் நம்மையே
நாம் ஏமாற்றிக்கொள்வோம். உண்மையும் நம்மிடம் இராது.
விடுதலை வழங்கும் கடவுள், கிறிஸ்துவின் பொருட்டு நம்
பாவங்களை மன்னிக்கவும், அவர் வாயிலாக நம்மைத் தம்மோடு
ஒப்பரவாக்கவும் நமது குற்றங்களைக் கிறிஸ்துவின் வாயிலாகக்
கடவுளிடம் அறிக்கையிடுவோமாக!
பிழை அறிக்கை:
நடத்துநர்:
"விவேகமுள்ளவரோ அறிவை எளிதில் பெறுவார்" எனப் போதித்திருக்கின்ற கடவுளே, எம் வாழ்வுக்கு ஆசியாகவும் சமூக மாற்றத்திற்கு ஆதாரமாகவும் கல்வியை நீர் எமக்குத் தந்திருந்தும் அதன்
மதிப்பை உணராமற்போனோம். கல்வி என்னும் அறிவுச் சமுத்திரத்தில் முழுகி முத்தெடுக்க வேண்டிய நாங்கள் சமூக ஊடகங்களிலும், தொடர்பு சாதனங்களிலும் சிக்குண்டு நேரத்தை விரயம்
செய்தோம். கைப்பேசி, கணிப்பொறி போன்ற மின்னணுப் பொருட்களை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தாமல் பொழுதுபோக்கிற்காகவும், சிற்றின்ப நாட்டங்களுக்காகவும் பயன்படுத்தி, உமக்கு
முன்பாகக் குற்றம் புரிந்தோம். திருமறையைப் படித்தல், இறைவேண்டல் ஏறெடுத்தல், கற்றவற்றில் நிலைத்திருத்தல் போன்ற ஆன்மிக நெறிகளுக்கு முதலிடம் தரத் தவறினோம்.
சமூக அநீதிகளை அடையாளம் காணவும், மேற்கொள்ளவும், கல்வியை ஆயுதமாகப் பயன்படுத்தாமல் சமூகத் தீமைகளோடு சமரசம் செய்துகொண்டோம். குற்றம் உணர்ந்து உம்மிடம்
வரும் எங்களை இறைவா, உமது பேரன்பை முன்னிட்டு மன்னித்தருள மன்றாடுகிறோம்.
பாடல்:
எந்தன் நீதி ஓர் கந்தை அல்லவோ, - யேசுநாதா ஸ்வாமி
என் செய்வேன் மறு தஞ்சம் இல்லையே
நடத்துநர்:
பிள்ளைகளே! தந்தையின் போதனைக்குச் செவிசாயுங்கள், எனக் கற்பித்திருக்கின்ற கடவுளே! தாங்கள் அடைகின்ற கடினங்களை தங்கள் குழந்தைகள் சந்திக்கக் கூடாது என்கிற எண்ணத்தோடு,
நாங்கள் கல்வி கற்று உயர அரும்பாடுபட்டு உழைக்கும் எங்கள் பெற்றோரின் அன்பையும் பாசத்தையும் புரிந்துகொள்ளத் தவறினோம். எங்கள் பெற்றோரின் உழைப்பை சுரண்டியதாலும்,
அவர்களின் நலன் தரும் ஆலோசனைகளை அலட்சியப்படுத்தியதாலும், கல்வியில் தோற்று போய் எங்கள் தாய் தந்தையின் கண்ணீருக்குக் காரணமானோம்.
எங்களுக்குக் கருத்தாய்க் கல்வி புகட்டும் ஆசிரியர்களின் அக்கறையையும் அரவணைப்பையும் அலட்சியம் செய்தோம். பள்ளிக்கூடம், நூலகம், திருச்சபை, திருமறைப்பள்ளி எனக் கற்பதற்கான
களங்கள் வாய்க்கப் பெற்றிருந்தும் வாஞ்சையோடு அவற்றைப் பயன்படுத்தத் தவறினோம். சக மாணவர்களோடு சமத்துவம் பேணாமல் ஏற்றத்தாழ்வுடன் நடந்து கொண்டோம்.
பிழை உணர்ந்து உம்மிடம் வரும் எங்களை, இறைவா, உமது பெருங்கருணையை முன்னிட்டு மன்னித்தருள மன்றாடுகிறோம்.

தலைமைக் குருவாக இருந்து நற்போதனைகளை எங்களுக்கு வழங்கியிருக்கின்ற அன்பின் கடவுளே, அறப்பணியாகிய ஆசிரியப் பணிக்கு அழைப்புப் பெற்றிருக்கின்ற நாங்கள்,
வகுப்பறையில் முகங்களையும் மாணவர்களின் மன இயல்பினையும் புரிந்துகொள்ளத் தவறினோம். மாணவர்களுக்கு நிகழும் குழப்பங்கள், இருக்கும் தயக்கங்கள்,
எழும் சந்தேகங்கள், பகிர்ந்துகொள்ளப்படாத வருத்தங்கள், வெளிப்படுத்த முடியாத கசப்புகள், புரிந்துகொள்ளப்படாத நியாயங்கள் என அவர்களின் உள மற்றும் உடல்நிலை அறிந்து
கல்வி புகட்டத் தவறினோம். இறுக்கங்கள் நிறைந்து கிடக்கும் வகுப்பறையில் கற்பித்தலின் வாயிலாக சந்தோசத்தின் சாரங்களைத் திறக்கத் தவறினோம். குழந்தைகள் அனைவரும்
தங்களுக்கான சொந்த நோக்கங்களை, இயல்புகளைக் கொண்ட, சாதிக்கும் திறன் பெற்ற இளம் உயிர்கள் என்பதைக் கருத்தில் கொள்ளாமல், அவர்களை கற்றல் நடவடிக்கைக்காகவே
உருவாக்கப்பட்ட பொம்மைகளாகக் கருதி பாடம் கற்பித்தோம். எங்கள் கற்பித்தல் பணிவிடையில், ஆசிரியர்களுக்கெல்லாம் ஆசிரியரான இயேசு கிறிஸ்துவின் கனிவுடன்
கற்பிக்கும் புதிய முன்மாதிரியைப் பின்பற்ற மறுத்தோம். தவறுகளை உணர்ந்து உம்மிடம் வரும் எங்களை, இறைவா, உமது பேரிரக்கத்தை முன்னிட்டு மன்னித்தருள மன்றாடுகிறோம்.
பாடல்:
எந்தன் நீதி ஓர் கந்தை அல்லவோ, - யேசுநாதா ஸ்வாமி
என் செய்வேன் மறு தஞ்சம் இல்லையே
நடத்துநர்: (பெற்றோர்)
நல்வழியில் நடக்கப் பிள்ளையைப் பழக்கு எனக் கற்பித்திருக்கின்ற கடவுளே! இவ்வுலகில் பிறந்திருக்கும் ஒவ்வொரு குழந்தையும் இப்பூமிக்காகவே பிறந்திருக்கின்றது; இப்பிரபஞ்சத்தின்
தொடர் இயக்கத்திற்குப் பங்காற்றப் போகிறது என்பதை அறியாமல் குடும்பத்தின் குறுகிய எல்லைக்குள் அவர்களின் வாழ்வைச் சுருக்கி அவா்களை வளா்த்து வந்தோம். குழந்தைகளின்
மீது எல்லையற்ற உரிமையுடையவா்களாய் அவா்களை உடைமைகளாகக் கருதி எங்கள் விருப்பங்களை அவா்கள்மேல் திணித்தோம். மதிப்பெண்களை நோக்கி ஒடும் பந்தயக்குதிரைகளாகப்
பிள்ளைகளை நடத்தினோம். திருச்சபைக்கும் திருப்பணிகளுக்கும் திருவசனங்களைக் கற்றுக் கொள்வதற்கும் முதன்மை இடம் தந்து அவா்களைக் கற்பிக்கத் தவறினோம்.
குழந்தைகளின் தவறுகளுக்கும், தோல்விகளுக்கும் தாய் தந்தையராகிய நாங்கள் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டி எங்கள் பொறுப்புகளிலிருந்து தவறிப்போனோம்.
பாவம் உணாந்து உம்மிடம் வரும் எங்களை இறைவா, உமது பேரருளை முன்னிட்டு மன்னித்தருள மன்றாடுகிறோம்.
பாடல்:
எந்தன் நீதி ஓர் கந்தை அல்லவோ, - யேசுநாதா, ஸ்வாமி
என் செய்வேன்? மறு தஞ்சம் இல்லையே
பிழைமன்னிப்பின் உறுதிமொழிதல்: ஆயா்
"அனைத்து ஆற்றலும் அருளும் மிகுந்த கடவுள் கூறுவது இதுவே:
'உன் குற்றங்களை கார்மேகம்போலும், உன் பாவங்களைப் பனிப்படலம்போலும் அகற்றிவிட்டேன். அமைதி அருளும் கடவுள்தாமே உங்களை முற்றிலும் தூய்மையாக்குவாராக!"
"அவர்தம் திருவுளத்தை நீங்கள் நிறைவேற்றும்படி, எல்லா நன்மைகளையும் செய்வதற்கு உங்களை ஆயத்தப்படுத்தி, இயேசு கிறிஸ்துவின் வழியாகத் தூய ஆவியாரின்
ஆற்றலை அருளி, தமக்கு உகந்ததை உங்களில் நிறைவேற்றுவாராக!"
இறைமக்கள்:
"ஆமென்! ஞானமே உருவாகிய கடவுள் ஒருவருக்கே, இயேசு கிறிஸ்துவின் வழியாய் என்றென்றும் மாட்சி உரித்தாகுக!
நன்றியறிதல் மன்றாட்டு
நடத்துநர்:
ஆண்டவரின் பேரன்பை முன்னிட்டு, மானிடர்களுக்காக அவர் செய்த வியத்தகு செயல்களை முன்னிட்டு, அவர்கள் அவருக்கு நன்றி செலுத்துவார்களாக! (திபா. 107:8)
இறைமக்கள்:
கடவுளின் பெயரை நான் பாடிப் புகழ்வேன்; அவருக்கு நன்றி செலுத்தி, அவரை மாட்சிமைப்படுத்துவேன். (திபா. 69:30)
நடத்துநர்:
எங்கள் வாழ்நாளை நலன்களினால் நிறைவுறச் செய்கின்ற அன்பின் கடவுளே, சமூக அடிமைத்தனத்திலும், மூடப்பழக்கவழக்கங்களிலும் மூழ்கிப்போயிருந்த எம் மூதாதையர்
கல்வியறிவு பெறவும், விடுதலை வாழ்வை சுதந்தரிக்கவும், தியாகத்தோடு சேவை புரிந்த அருள்தொண்டர்களுக்காகவும், திருச்சபைகளுக்காகவும், நிறுவனங்களுக்காகவும்
உமக்கு நன்றி படைக்கின்றோம்.தலைமுறைத் தலைமுறையாக உமது உடன்படிக்கையின் உறுதிமொழிகளை எங்கள் வாழ்வில் நிறைவேற்றியதன் வாயிலாக இன்று நாங்கள்
பெற்றுள்ள எங்கள் திருச்சபை, கன்னியாகுமரிப் பேராயம், திருச்சபைகள், பேராயர், ஆயர்கள், திருப்பணியர், கிறிஸ்தவக் கல்வி வளர்ச்சித்துறை, திருமறைப்பள்ளி,
கல்விக் கூடங்கள், இறையியல், கலை, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லூரிகள், ஆசிரியர்கள், மாணாக்கர் என அனைவருக்காகவும், அவர்கள்
வழியாக நாங்கள் பெற்றுவரும் அருள்வளங்களுக்காகவும், உமது மேன்மைமிக்க செயல்களுக்காகவும் இறைவா, உமக்கு நன்றி செலுத்துகின்றோம்.
பாடல்:
நன்றி என்று சொல்லுகிறோம் நாதா,
நாவாலே துதிக்கிறோம் நாதா,
நன்றி இயேசு ராஜா (2)
நடத்துநர்:
"ஆண்டவர் செய்த வியத்தகு செயல்களை நினைவுகூருங்கள்" எனக் கற்பித்திருக்கின்ற கடவுளே, கடந்த கல்வியாண்டில் நாங்கள் நேர்த்தியாய்க் கற்றுத் தேர்ச்சியடையவும்,
உயர் கல்விக்கான வாய்ப்பைப் பெறவும், உயர்ந்த இலக்கை நிர்ணயித்து, அவைகளை நோக்கி முன்னேறிச் செல்லவும் அருள்செய்தமைக்காக உமக்கு நன்றி செலுத்துகின்றோம்.
சமூகத்தில் நிலவும் பாகுபாடுகளையும் பிரிவினைகளையும் தாண்டி ஒருமைப்பாட்டினை உருவாக்கும் ஆற்றலைக் கல்வியினூடாக எமக்கு வழங்கியமைக்காகவும், மார்க்க பேதங்களையும் வர்க்க
வேறுபாடுகளையும் கடந்து சமத்துவ சமுதாயத்தை ஏற்படுத்த கல்விப் புலங்களில் எமக்கு வாய்ப்பினைத் தந்தமைக்காகவும், இறைவா, உமக்கு நன்றி படைக்கின்றோம்.
பாடல்:
நன்றி என்று சொல்லுகிறோம் நாதா,
நாவாலே துதிக்கிறோம் நாதா,
நன்றி இயேசு ராஜா (2)
நடத்துநர்:
"தாழ்வுற்றிருந்த ருந்த நம்மை நினைவுகூர்ந்தவருக்கு நன்றி செலுத்துங்கள்" என்று கற்றுத்தந்த கடவுளே, நலிவுற்றோர் தம் வாழ்வில் ஏற்றம் பெற, அவர்களின் வாழ்வை,
உரிமையை உறுதி செய்ய நீர் தந்துள்ள மாற்றுத்திறன் படைத்தோருக்கான கல்விக் கூடங்கள், காப்பகங்கள், தொழிற்பயிற்சி நிலையங்கள், மருத்துவ நிலையங்கள்
போன்றவற்றிற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம்.எளியோரின் கல்வி மற்றும் வாழ்க்கைத் தரம் உயரவும், உரிமைகள் கிடைக்கப்பெற்று தற்சார்புடையோராய் நிலைத்து
நிற்கவும் நீர் வழங்கியிருக்கின்ற வளங்களுக்காகவும் நலன்களுக்காகவும் இறைவா, உமக்கு நன்றிகளைப் படைக்கின்றோம்.
பாடல்:
நன்றி என்று சொல்லுகிறோம் நாதா,
நாவாலே துதிக்கிறோம் நாதா,
நன்றி இயேசு ராஜா (2)
நடத்துநர்:
"கடல்மீது மண்ணகத்தை விரித்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்" எனக் கற்பித்திருக்கின்ற கடவுளே! அனைத்து உயிரினங்கள் மற்றும் எல்லாப் படைப்புகளின் வழியாகத் தம்
இயல்புகளை வெளிப்படுத்தி, அவற்றின் வழியாக விண்ணரசின் தகவுகளைக் கற்றுத்தந்தமைக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
படைப்புகளோடு இணைந்து நாங்களும்
உமது மாட்சியைப் பறைசாற்றவும், பொறுப்புள்ள இறைமக்களாய் இப்பூமியைப் பண்படுத்தி, பாதுகாத்து, அதன் பலனை அறுவடை செய்யவும், அடுத்த தலைமுறைக்கென இவ்வுலகைப்
பேணி வளர்க்கவும் எம்மைப் பயன்படுத்துகின்றதற்காக இறைவா, உமக்கு நன்றி செலுத்துகின்றோம்.
பாடல்:
நன்றி என்று சொல்லுகிறோம் நாதா,
நாவாலே துதிக்கிறோம் நாதா,
நன்றி இயேசு ராஜா. (2)
ஆண்டவர் கற்பித்த இறைவேண்டல்:
விண்ணுலகிலிருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக! உமது ஆட்சி வருக! உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவதுபோல மண்ணுலகிலும்
நிறைவேறுக! எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துள்ளதுபோல குற்றங்களை மன்னியும்.
எங்கள் எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீயோனிடமிருந்து எங்களை விடுவியும். ஆட்சியும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் உமக்கே. ஆமென்!
திருமறைப் பாடங்கள் படித்தல்:
பழைய ஏற்பாட்டுப் பாடம்: 2 நாளாகமம் : 20 : 13 – 19
13. யூதா கோத்திரத்தார் அனைவரும், அவர்கள் குழந்தைகளும், அவர்கள் பெண்ஜாதிகளும், அவர்கள் குமாரருங்கூட கர்த்தருக்கு முன்பாக நின்றார்கள்.
14. அப்பொழுது சபையின் நடுவிலிருக்கிற மத்தனியாவின் குமாரனாகிய ஏயெலின் மகனான பெனாயாவுக்குப் பிறந்த சகரியாவின் புத்திரன் யகாசியேல் என்னும்
ஆசாப்பின் புத்திரரில் ஒருவனான லேவியன்மேல் கர்த்தருடைய ஆவி இறங்கினதினால் அவன் சொன்னது:
15. சகல யூதா கோத்திரத்தாரே, எருசலேமின் குடிகளே, ராஜாவாகிய யோசபாத்தே, கேளுங்கள்; நீங்கள் அந்த ஏராளமான கூட்டத்திற்குப் பயப்படாமலும் கலங்காமலும்
இருங்கள் என்று கர்த்தர் உங்களுக்குச் சொல்லுகிறார்; இந்த யுத்தம் உங்களுடையதல்ல, தேவனுடையது.
16. நாளைக்கு நீங்கள் அவர்களுக்கு விரோதமாய்ப் போங்கள்; இதோ, அவர்கள் சிஸ் என்னும் மேட்டுவழியாய் வருகிறார்கள்; நீங்கள் அவர்களை யெருவேல்
வனாந்தரத்திற்கு எதிரான பள்ளத்தாக்கின் கடையாந்தரத்திலே கண்டு சந்திப்பீர்கள்.
17. இந்த யுத்தத்தைப் பண்ணுகிறவர்கள் நீங்கள் அல்ல; யூதா மனுஷரே, எருசலேம் ஜனங்களே, நீங்கள் தரித்துநின்று கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்;
பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள்; நாளைக்கு அவர்களுக்கு எதிராகப் புறப்படுங்கள்; கர்த்தர் உங்களோடே இருக்கிறார் என்றான்.
18. அப்பொழுது யோசபாத் தரைமட்டும் முகங்குனிந்தான்; சகல யூதா கோத்திரத்தாரும் எருசலேமின் குடிகளும் கர்த்தரைப் பணிந்துகொள்ளக் கர்த்தருக்குமுன்பாகத் தாழவிழுந்தார்கள்.
19. கோகாத்தியரின் புத்திரரிலும் கோராகியரின் புத்திரரிலும் இருந்த லேவியர் எழுந்திருந்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை மகா சத்தத்தோடே கெம்பீரமாய்த் துதித்தார்கள்.
பாடல்:
வானம் அகலும் பூமி அழியும்
வேத வசனம் நிலைத்திருக்கும்
பரமன் வேதம் எனது செல்வம்
பரவசம் நிதம் அருளும்
திருமுகப் பாடம் : அப்போஸ்தலர் : 18 : 24 - 28
24. அப்பொழுது அலெக்சந்திரியா பட்டணத்தில் பிறந்தவனும் சாதுரியவானும் வேதாகமங்களில் வல்லவனுமான அப்பொல்லோ என்னும் பேர்கொண்ட ஒரு யூதன் எபேசு பட்டணத்துக்கு வந்தான்.
25. அவன் கர்த்தருடைய மார்க்கத்திலே உபதேசிக்கப்பட்டு, யோவான் கொடுத்த ஸ்நானத்தைமாத்திரம் அறிந்தவனாயிருந்து, ஆவியில் அனலுள்ளவனாய்க் கர்த்தருக்கு
அடுத்தவைகளைத் திட்டமாய்ப் போதகம்பண்ணிக்கொண்டுவந்தான்.
26. அவன் ஜெபஆலயத்தில் தைரியமாய்ப் பேசத்தொடங்கினபோது, ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் அவன் பேசுகிறதைக் கேட்டு, அவனைச் சேர்த்துக்கொண்டு,
தேவனுடைய மார்க்கத்தை அதிக திட்டமாய் அவனுக்கு விவரித்துக்காண்பித்தார்கள்.
27. பின்பு அவன் அகாயா நாட்டிற்குப் போகவேண்டுமென்றிருக்கையில், சீஷர்கள் அவனை ஏற்றுக்கொள்ளும்படி சகோதரர் அவர்களுக்கு எழுதினார்கள்.
28. அவன் அங்கே வந்தபின்பு வெளியரங்கமாக யூதர்களுடனே பலமாய்த் தர்க்கம்பண்ணி, இயேசுவே கிறிஸ்து என்று வேதவாக்கியங்களைக்கொண்டு
திருஷ்டாந்தப்படுத்தினபடியால், கிருபையினாலே விசுவாசிகளானவர்களுக்கு மிகவும் உதவியாயிருந்தான்.
பாடல்:
வேதப் பிரியர் தேவப் புதல்வர்
சேதமடையா நடந்திடுவார்
இலைகள் உதிரா மரங்கள் போல
இவர்கள் நல்ல கனி தருவார்
நற்செய்திப் பாடம் : யோவான் : 8 : 12 - 20
12. மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்.
13. அப்பொழுது பரிசேயர் அவரை நோக்கி: உன்னைக் குறித்து நீயே சாட்சிகொடுக்கிறாய்; உன்னுடைய சாட்சி உண்மையானதல்ல என்றார்கள்.
14. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: என்னைக்குறித்து நானே சாட்சிகொடுத்தாலும், என் சாட்சி உண்மையாயிருக்கிறது; ஏனெனில் நான் எங்கேயிருந்து
வந்தேனென்றும், எங்கே போகிறேனென்றும் அறிந்திருக்கிறேன்; நீங்களோ நான் எங்கேயிருந்து வருகிறேனென்றும், எங்கே போகிறேனென்றும் அறியீர்கள்.
15. நீங்கள் மாம்சத்துச்கேற்றபடி நியாயந்தீர்க்கிறீர்கள், நான் ஒருவனையும் நியாயந்தீர்க்கிறதில்லை;
16. நான் நியாயந்தீர்த்தால், என் தீர்ப்பு சத்தியத்தின்படியிருக்கும்; ஏனெனில் நான் தனித்திருக்கவில்லை நானும் என்னை அனுப்பின பிதாவுமாக இருக்கிறோம்.
17. இரண்டுபேருடைய சாட்சி உண்மையென்று உங்கள் நியாயப்பிரமாணத்திலும் எழுதியிருக்கிறதே.
18. நான் என்னைக்குறித்துச் சாட்சி கொடுக்கிறவனாயிருக்கிறேன், என்னை அனுப்பின பிதாவும் என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறார் என்றார்.
19. அப்பொழுது அவர்கள்: உம்முடைய பிதா எங்கே என்றார்கள். இயேசு பிரதியுத்தரமாக: என்னையும் அறியீர்கள், என் பிதாவையும் அறியீர்கள்; நீங்கள் என்னை
அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிவீர்கள் என்றார்.
20. தேவாலயத்திலே இயேசு உபதேசம்பண்ணுகிறபோது, தருமப்பெட்டியிருக்கும் இடத்தில் இந்த வசனங்களைச் சொன்னார். அவருடைய வேளை இன்னும்
வராதபடியினால் ஒருவனும் அவரைப் பிடிக்கவில்லை.
ஞானப்பாடல் : 401
1.யாரிலும் மேலான அன்பர்,
மா நேசரே;
தாயைப் பார்க்க நல்ல நண்பர்,
மா நேசரே;
மற்ற நேசர் விட்டுப் போவார்,
நேசித்தாலும் கோபம் கொள்வார்,
இயேசுவோ என்றென்றும் விடார்;
மா நேசரே.
2.என்னைத் தேடிச் சுத்தஞ்செய்தார்,
மா நேசரே;
பற்றிக்கொண்ட என்னை விடார்,
மா நேசரே;
இன்றும் என்றும் பாதுகாப்பார்,
பற்றினோரை மீட்டுக்கொள்வார்,
துன்ப நாளில் தேற்றல் செய்வார்;
மா நேசரே.
3. நெஞ்சமே, நீ த்யானம் பண்ணு,
மா நேசரே ;
என்றுமே விடாமல் எண்ணு,
மா நேசரை;
எந்தத் துன்பம் வந்தும் நில்லு,
நேரே மோட்சப் பாதை செல்லு,
யேசுவாலே யாவும் வெல்லு;
மாநேசரே.
4. என்றென்றைக்கும் கீர்த்தி சொல்வோம்,
மா நேசரே;
சோர்வுற்றாலும் வீரங்கொள்வோம்,
மா நேசரே;
கொண்ட நோக்கம் சித்திசெய்வார்,
நம்மை அவர் சேர்த்துக்கொள்வார்,
மோட்ச நன்மை யாவும் ஈவார்;
மா நேசரே.
அருளுரை :
பற்றுறுதி அறிக்கை :
திருத்தூதுவர் பற்றுறுதி அறிக்கை
புதிதாகக் கல்விச் சாலைக்குச் செல்லும் குழந்தைகளுக்கு ஆசி கூறுதல்
(பாடல் பாடப்பெறும்போது புதிதாகப் பாடசாலைக்குச் செல்லும் குழந்தைகளுடன் பெற்றோர் திருப்பீடத்தின் முன் வருவர்)
பாடல்:
உந்தன் ஆசி தாரும்
எந்தன் இயேசு தேவா
தந்தையே நான் பணிகிறேன்
ஞானம் அற்றவன் நானே
ஞானம் தாரும் தேவா
உம்மை அன்றி வழி ஏது
என் கல்வி ஊற்றும் நீரே
திருமறைப்பகுதி: ஆண்டவரின் பேரன்பைப் பற்றி நான் என்றும் பாடுவேன்; நீர் உண்மையுள்ளவர் எனத் தலைமுறைதோறும் என் நாவால் அறிவிப்பேன்.
உன் குழந்தைகள் அனைவருக்கும் ஆண்டவர்தாமே கற்றுத்தருவார்; உன் பிள்ளைகள் நிறைவாழ்வு பெற்றுச் சிறப்புறுவர்.
நான் உனக்கு அறிவு புகட்டுவேன்;
நீ நடக்க வேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்னைக் கண்ணோக்கி, உனக்கு அறிவுரை கூறுவேன்.
நான் கனிவும் மனத்தாழ்மையும்
உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக் கொண்டு என்னிடம் கற்றுக் கொள்ளுங்கள்.
சிறுபிள்ளைகளை இயேசு தொடவேண்டுமென்று அவர்களைச் சிலர் அவரிடம் கொண்டு வந்தனர்.
அவர் அவர்களை அரவணைத்து, தம் கைகளை அவர்கள் மீது வைத்து ஆசி வழங்கினார்.
பெற்றோர்: ஆண்டவரே! உமது வார்த்தையின்படி எங்கள் குழந்தைகளுக்குக் கற்பிக்கவும் அவர்கள் கற்றுக்கொள்ளவும் எங்களையும், நீர் எமக்குத் தந்திருக்கின்ற
இந்தக் குழந்தைகளையும் உம் திருமுன் அர்ப்பணிக்கின்றோம். ஆமென்!
இறைவேண்டல்:
(இறைவேண்டலுக்குப் பின்னர் ஆயர் அல்லது திருப்பணிவிடையாளர் குழந்தைகளின் நெற்றியில் சிலுவை அடையாளமிட்டு ஆசி வழங்கலாம்.
குழந்தைகளுக்கு வசன அட்டையோ, இனிப்போ அல்லது வேறு பரிசோ வழங்கி வாழ்த்தைப் பகிரலாம்)
இறைவாழ்த்து:
இயேசு ஞானத்திலும், உடல் வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்ததுபோல, இந்தக் குழந்தைகள் வளரவும் வாழவும் தூய
ஆவியார் வாயிலாகக் கடவுள் துணை செய்வாராக. ஆமென்!
திருப்பணிக்கொடை படைத்தல்:
திருப்பணிக்கொடைக்கான இறைவேண்டல்:
அறிவிப்புகள்:
பாடல் : கீர்த்தனை : 57
1. வந்து நல்வரம் தந்தனுப்பையா,-ஆதி நாதா, ஜோதீ
வல்ல ஆவியை வார்த் தெழுப்பையா.
2. பண்ணின ஜெபம் எண்ணிக்கேள் இன்னும்-ஆதிநாதா ஜோதீ
பண்பாய் உள்ளினில் பதிந்து ஆளென்றும்.
3. காதில் கேட்ட உன் கோதில் வாக்கியம்-ஆதிநாதா, ஜோதீ
கருத்தில் இருத்தப்போதே பாக்கியம்.
4. புறத்தில் சென்று அறத்தைச் செய்யவே, - ஆதி நாதா, ஜோதீ
புத்தியைத் தா நான் புதிதாய் உய்யவே.
5. இந்தப் பலியின் சொந்தக் 'கந்தமே-ஆதிநாதா ஜோதீ
என்னில் கமழ ஈவாய் அந்தமே.
இடையீட்டு மன்றாட்டு:
நடத்துநர்:
மன்றாடுவோமாக!
இரக்கத்தையும் நீதியையும் அன்பையும் வெளிப்படுத்துகின்ற தூய கடவுளே,
மனிதநேயத்தோடு கூடிய சனநாயக, சமத்துவ, சகோதரத்துவச் சமூகத்தைக் கட்டி எழுப்பும் நோக்கோடு கல்வி அமைப்புகளும், நிறுவனங்களும் அரசுகளும்
தொண்டாற்றத் துணைபுரிவீராக! இறையருளால் உலகின் அனைத்து ஞானங்களையும் கற்றுக்கொண்டு சமூகத்துக்கும் சபைக்கும் பயனுள்ள வகையில்
பங்காற்றுவதற்காக மாணாக்கரை மாற்றுருவாக்கம் செய்யும் மையமாக கல்விக்கூடங்கள் திகழ உதவி செய்வீராக! கல்வியை ஓர் அரசியல், சமூக,
ஆன்மிகச் செயல்பாடாகக் கருதி அதனூடாக முழுமையான விடுதலையைச் சாத்தியப்படுத்திக்கொள்ள இறைவா, உமதருள் வேண்டி மன்றாடுகிறோம்.
இறைமக்கள்:
உமது இரக்கத்தை முன்னிட்டு
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் ஆண்டவரே!
நடத்துநர்:
இதோ, புதுச்செயல் ஒன்றை நான் செய்கிறேன்;இப்பொழுதே அது தோன்றிவிட்டது என எமக்கு வாக்குறுதி வழங்கியிருக்கின்ற கடவுளே, இந்தப் புதிய
கல்வியாண்டில் புதிய காட்சியோடும் புத்துணர்வோடும் அடியெடுத்து வைத்திருக்கின்ற நாங்கள், தடையின்றி எங்கள் கல்வியைத் தொடரவும் உயர்கல்விக்கான
வாய்ப்புகளைப் பெறவும், வேலை வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ளவும் கல்வியின் வழியாகச் சிகரங்களை அடையவும் துணைசெய்தருளும்.
தோல்வியைச் சந்தித்ததாலும், பொருளாதாரக் காரணங்களினாலும், உரிமையும் வாய்ப்பும் மறுக்கப்பட்டதாலும், சமூக ஏற்றத்தாழ்வுகளாலும்
கல்விக்கூடங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட மாணவர்களை நீர் சந்தித்தருளும். அத்தகையோரின் வாழ்வையும் கல்வி கற்கும் உரிமையையும் சபையாகவும்
சமூகமாகவும் நாங்கள் உறுதிசெய்ய எமக்கு உதவியருளும். குடும்பங்களிலும் கல்விச்சாலைகளிலும் குழந்தைகள், குறிப்பாக, பெண்குழந்தைகளுக்கு எதிரான அநீதிகள்,
உரிமை மீறல்கள், பாலியல் வன்கொடுமைகள், குழந்தைக் கடத்தல் போன்ற தீமைகளுக்கு எதிரான விழிப்புணர்வையும் அவற்றை மேற்கொள்வதற்கான வழிகளையும்
கண்டடைய இறைவா, உமதருள் வேண்டி மன்றாடுகிறோம்.
இறைமக்கள்:
உமது இரக்கத்தை முன்னிட்டு
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் ஆண்டவரே!
நடத்துநர்:
திக்கற்றவர்களின் வேண்டுதலுக்கு செவி கொடுக்கின்ற கடவுளே, இவ்வுலகில் நோய்களினாலும், வறுமையினாலும் வேதனையில் உழலுகின்ற அனைத்து மக்களின்
நல்வாழ்வுக்காக உம்மை நோக்கி மன்றாடுகிறோம். பல்வேறு பருவ மற்றும் நாள்பட்ட வியாதிகளினாலே பாதிக்கப்பட்டிருக்கின்ற குழந்தைகளும் மாற்றுத்திறன் படைத்தோரும்
நலம்பெற இரக்கம் காண்பித்தருளும். உடல் குறைபாடுகளைக் காரணம் காட்டி குழந்தைகளிடம் பேதம் பார்க்கும் சமூகத்தின் மனநிலையைக் குணமாக்கியருளும்.
ஊட்டச்சத்து கிடைக்கப்பெறாத குழந்தைகள், ஆதரவற்ற குழந்தைகள், குழந்தை தெருவோரத்தில் வாழும் குழந்தைகள், காணாமற்போன குழந்தைகள் என அனைத்துக்
குழந்தைகளின் மீதான அக்கறையை எமக்குத் தந்து குழந்தைகளின் நலம் நாடுவதற்காக நாங்கள் தொடர்ந்து உழைக்க இறைவா, உமதருள் வேண்டி மன்றாடுகிறோம்.
இறைமக்கள்:
உமது இரக்கத்தை முன்னிட்டு
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் ஆண்டவரே!
நடத்துநர்:
எங்கள் கூக்குரலைக்கேட்டு விண்ணப்பத்திற்குச் செவிசாய்க்கின்ற ஆற்றல் நிறைந்த கடவுளே, உம்மில் நிலைத்திருந்து கல்வித் திருப்பணியை நிறைவேற்றி
வருகின்ற எங்கள் கன்னியாகுமரிப் பேராயம், கிறிஸ்தவக் கல்வி வளர்ச்சித்துறை, திருச்சபைகள், கல்வி நிறுவனங்கள் குறிப்பாக, எங்கள் திருச்சபை என
அனைத்தின் முற்போக்கான வளர்ச்சிக்காக உம்மை நோக்கி மன்றாடுகிறோம். அனைவரும் வாழ்வு பெறும் பொருட்டு கல்விச் சேவைகள் விரிவடையவும், கல்வி வணிகச்
சந்தையிலிருந்து விடுதலை பெற்று அனைத்து மக்களுக்கும் கிடைக்கப்பெறவும் மதிப்பீடுகளை மையமாகக் கொண்ட கற்றல் முறைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படவும்
ஆண்டவரை அறிகிற அறிவில் அனைவரும் வளரவும் இறைவா, உமதருள் வேண்டி மன்றாடுகிறோம்.
இறைமக்கள்:
உமது இரக்கத்தை முன்னிட்டு
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் ஆண்டவரே!
நிறைவு இறைவேண்டல்:
நிறைவுக் கவி:
ஞானப்பாடல் : 418
கெம்பீரமாகவே
சங்கீதம் பாடுங்கள்;
மாந்தர் எல்லாருமே,
மகிழ்ந்து போற்றுங்கள்;
பிதா,குமாரன், ஆவியாம்
த்ரியேகருக்குத் துதியாம்.
இறையாசி:ஆயர்
ஆமென்...! ஆமென்...! ஆமென்...!
நடத்துநர் : ஆண்டவர் உங்களோடிருப்பாராக!
இறைமக்கள் : அவர் உம்மோடும் இருப்பாராக!
நடத்துநர் : சமாதானத்துடன் சென்று வாருங்கள்!
இறைமக்கள் : ஆண்டவரின் திருப்பெயராலே, ஆமென்
தென்னிந்தியத் திருச்சபை
கன்னியாகுமரிப் பேராயம்
கிறிஸ்தவக் கல்வி வளா்ச்சித்துறை
மாணவா் ஞாயிறு
சிறப்புத் தொழுகை
07-06-2026
2 / 224
மாணவா் ஞாயிறு
கருப்பொருள்
3 / 224
மாணவா் ஞாயிறு
Jesus The Ultimate Influencer
4 / 224
மாணவா் ஞாயிறு
வரவேற்பு:
5 / 224
மாணவா் ஞாயிறு
தூய ஆவியார் என்னும் மூவொரு கடவுளின் திருப்பெயா் வாழ்த்தப்பெறுவதாக! 2026-ஆம் ஆண்டின் மாணவா் ஞாயிறு சிறப்புத் தொழுகையில் பங்கேற்கும்படியாய் வருகை புரிந்திருக்கின்ற இறைமக்கள்
6 / 224
மாணவா் ஞாயிறு
அனைவரையும் இறைமைந்தன் இயேசு கிறிஸ்துவின் இனிய பெயரில் வாழ்த்தி வரவேற்றுக் கொள்கிறோம். நாம் அனைவரும் எழுந்து நன்றியுள்ள இருதயத்தோடே கடவுளைத் தொழுவோமாக!
7 / 224
மாணவா் ஞாயிறு
இறைப்புகழ்ப்பா:
1. யேசு கற்பித்தார் ஒளி வீசவே,
சிறு தீபம்போல இருள் நீக்கவே;
அந்தகார லோகில் ஒளி வீசுவோம்.
அங்கும் இங்கும் எங்கும்
பிரகாசிப்போம்.
8 / 224
மாணவா் ஞாயிறு
2. முதல் அவர்க்காய் ஒளி வீசுவோம்;
ஒளி மங்கிடாமல்
காத்துக் கொள்ளுவோம்;
இயேசு நோக்கிப் பார்க்க
ஒளி வீசுவோம்.
அங்கும் இங்கும் எங்கும்
பிரகாசிப்போம்.
9 / 224
மாணவா் ஞாயிறு
தொழுகைக்கு அழைப்பு:
ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.
ஆண்டவர் நமக்குக் காட்டும் மாறாத அன்பு மிகப் பெரியது;
10 / 224
மாணவா் ஞாயிறு
அவரது உண்மை என்றென்றும் நிலைத்துள்ளது. ஆண்டவரே நான் உமது திருச்சட்டத்தின் மீது எத்துணைப் பற்றுக்கொண்டுள்ளேன். நாள் முழுவதும் அதைப்பற்றியே சிந்திக்கின்றேன்.!
11 / 224
மாணவா் ஞாயிறு
நம் கடவுளாகிய ஆண்டவரைப் பெருமைப்படுத்துங்கள்; அவரது அரியணைமுன் தாள்பணிந்து வணங்குங்கள்.
12 / 224
மாணவா் ஞாயிறு
தொடக்க இறைவேண்டல்:
13 / 224
மாணவா் ஞாயிறு
ஞானத்தை அனைவருக்கும் தாராளமாக வழங்குகின்ற எங்கள் தாயும் தந்தையுமாகிய அன்புக் கடவுளே, 2026-ஆம் ஆண்டின் மாணவர் ஞாயிறு சிறப்புத் தொழுகையில் பங்குபெறவும்,
14 / 224
மாணவா் ஞாயிறு
உம்மைப் பணிந்து கொள்ளவும், உமது வாக்கினால் ஆற்றல்படுத்தப்பெறவும் நீர் தந்த வாய்ப்புக்காக உமக்கு நன்றி படைக்கின்றோம். உம் அருளால் ஒரு கல்வியாண்டை நிறைவு செய்து புதிய கல்வியாண்டில்
15 / 224
மாணவா் ஞாயிறு
நுழைந்திருக்கின்ற நாங்கள் வாழ்வருளும் உமது வழிகாட்டுதலை பெறவும், ஞாலம் போற்றும் உமது ஞானத்தை உடைமையாக்கிக்
கொள்ளவும் நாடுகின்றோம். எங்கள் எதிர்நோக்குகளும்
16 / 224
மாணவா் ஞாயிறு
இலட்சியங்களும் நிறைவேறட்டும். இத்தொழுகையில் உமது உடனிருப்பை உணரவும், உமது உந்துதலை ஏற்று எமை நின் திருக்கரத்தில் ஒப்படைக்கவும் அருள்தாரும். உம்முடைய கற்பிதங்களின் வாயிலாக
17 / 224
மாணவா் ஞாயிறு
இறையாளுகையின் தகவுகளில் வளர்ந்து, நற்பண்புகளால் எங்கள் வாழ்வை அணிசெய்து, உமக்குச் சான்றுகளாய் இலங்கிடத் துணை செய்தருளும். ஆண்டவரும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவின்
18 / 224
மாணவா் ஞாயிறு
வழியாக மன்றாடுகிறோம் நல்ல கடவுளே, ஆமென்.
19 / 224
மாணவா் ஞாயிறு
ஞானப்பாடல் : 482
20 / 224
மாணவா் ஞாயிறு
1 யேசு எந்தன் நேசரே,
கண்டேன் வேத நூலிலே;
பாலர் அவர் சொந்தந்தான்,
தாங்க அவர் வல்லோர்தான்.
21 / 224
மாணவா் ஞாயிறு
யேசு என் நேசர்,
யேசு என் நேசர்,
யேசு என் நேசர்,
மெய் வேத வாக்கிதே.
22 / 224
மாணவா் ஞாயிறு
2. என்னை மீட்க மரித்தார்,
மோட்ச வாசல் திறந்தார்
எந்தன் பாவம் நீக்குவார்,
பாலன் என்னை ரட்சிப்பார்.
23 / 224
மாணவா் ஞாயிறு
யேசு என் நேசர்,
யேசு என் நேசர்,
யேசு என் நேசர்,
மெய் வேத வாக்கிதே.
24 / 224
மாணவா் ஞாயிறு
3 பெலவீனம், நோவிலும்
என்றும் என்னை நேசிக்கும்
இயேசு தாங்கித் தேற்றுவார்,
பாதுகாக்க வருவார்.
25 / 224
மாணவா் ஞாயிறு
யேசு என் நேசர்,
யேசு என் நேசர்,
யேசு என் நேசர்,
மெய் வேத வாக்கிதே.
என் பிள்ளைகளே, நீங்கள் பாவம் செய்யாதிருக்க வேண்டும் என இதை நான் உங்களுக்கு எழுதுகிறேன்; ஆயினும் ஒருவர் பாவம் செய்ய நேர்ந்தால் தந்தையிடம் பரிந்து பேசுபவர் ஒருவர் நமக்கு இருக்கிறார்.
44 / 224
மாணவா் ஞாயிறு
அவரே மாசற்ற இயேசு கிறிஸ்து. பாவங்களை நீக்கவே அவர் தோன்றினார் என்பது உங்களுக்குத் தெரியும். அவரிடம் பாவம் இல்லை. ஆனால் பாவம் நம்மிடம் இல்லை என்போமென்றால் நம்மையே
45 / 224
மாணவா் ஞாயிறு
நாம் ஏமாற்றிக்கொள்வோம். உண்மையும் நம்மிடம் இராது.
46 / 224
மாணவா் ஞாயிறு
விடுதலை வழங்கும் கடவுள், கிறிஸ்துவின் பொருட்டு நம்
பாவங்களை மன்னிக்கவும், அவர் வாயிலாக நம்மைத் தம்மோடு
ஒப்பரவாக்கவும் நமது குற்றங்களைக் கிறிஸ்துவின் வாயிலாகக்
கடவுளிடம் அறிக்கையிடுவோமாக!
47 / 224
மாணவா் ஞாயிறு
பிழை அறிக்கை:
48 / 224
மாணவா் ஞாயிறு
நடத்துநர்:
"விவேகமுள்ளவரோ அறிவை எளிதில் பெறுவார்" எனப் போதித்திருக்கின்ற கடவுளே, எம் வாழ்வுக்கு ஆசியாகவும் சமூக மாற்றத்திற்கு ஆதாரமாகவும் கல்வியை நீர் எமக்குத் தந்திருந்தும் அதன்
49 / 224
மாணவா் ஞாயிறு
மதிப்பை உணராமற்போனோம். கல்வி என்னும் அறிவுச் சமுத்திரத்தில் முழுகி முத்தெடுக்க வேண்டிய நாங்கள் சமூக ஊடகங்களிலும், தொடர்பு சாதனங்களிலும் சிக்குண்டு நேரத்தை விரயம்
50 / 224
மாணவா் ஞாயிறு
செய்தோம். கைப்பேசி, கணிப்பொறி போன்ற மின்னணுப் பொருட்களை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தாமல் பொழுதுபோக்கிற்காகவும், சிற்றின்ப நாட்டங்களுக்காகவும் பயன்படுத்தி, உமக்கு
51 / 224
மாணவா் ஞாயிறு
முன்பாகக் குற்றம் புரிந்தோம். திருமறையைப் படித்தல், இறைவேண்டல் ஏறெடுத்தல், கற்றவற்றில் நிலைத்திருத்தல் போன்ற ஆன்மிக நெறிகளுக்கு முதலிடம் தரத் தவறினோம்.
52 / 224
மாணவா் ஞாயிறு
சமூக அநீதிகளை அடையாளம் காணவும், மேற்கொள்ளவும், கல்வியை ஆயுதமாகப் பயன்படுத்தாமல் சமூகத் தீமைகளோடு சமரசம் செய்துகொண்டோம். குற்றம் உணர்ந்து உம்மிடம்
53 / 224
மாணவா் ஞாயிறு
வரும் எங்களை இறைவா, உமது பேரன்பை முன்னிட்டு மன்னித்தருள மன்றாடுகிறோம்.
54 / 224
மாணவா் ஞாயிறு
பாடல்:
55 / 224
மாணவா் ஞாயிறு
எந்தன் நீதி ஓர் கந்தை அல்லவோ, - யேசுநாதா ஸ்வாமி
என் செய்வேன் மறு தஞ்சம் இல்லையே
56 / 224
மாணவா் ஞாயிறு
நடத்துநர்:
பிள்ளைகளே! தந்தையின் போதனைக்குச் செவிசாயுங்கள், எனக் கற்பித்திருக்கின்ற கடவுளே! தாங்கள் அடைகின்ற கடினங்களை தங்கள் குழந்தைகள் சந்திக்கக் கூடாது என்கிற எண்ணத்தோடு,
57 / 224
மாணவா் ஞாயிறு
நாங்கள் கல்வி கற்று உயர அரும்பாடுபட்டு உழைக்கும் எங்கள் பெற்றோரின் அன்பையும் பாசத்தையும் புரிந்துகொள்ளத் தவறினோம். எங்கள் பெற்றோரின் உழைப்பை சுரண்டியதாலும்,
58 / 224
மாணவா் ஞாயிறு
அவர்களின் நலன் தரும் ஆலோசனைகளை அலட்சியப்படுத்தியதாலும், கல்வியில் தோற்று போய் எங்கள் தாய் தந்தையின் கண்ணீருக்குக் காரணமானோம்.
59 / 224
மாணவா் ஞாயிறு
எங்களுக்குக் கருத்தாய்க் கல்வி புகட்டும் ஆசிரியர்களின் அக்கறையையும் அரவணைப்பையும் அலட்சியம் செய்தோம். பள்ளிக்கூடம், நூலகம், திருச்சபை, திருமறைப்பள்ளி எனக் கற்பதற்கான
60 / 224
மாணவா் ஞாயிறு
களங்கள் வாய்க்கப் பெற்றிருந்தும் வாஞ்சையோடு அவற்றைப் பயன்படுத்தத் தவறினோம். சக மாணவர்களோடு சமத்துவம் பேணாமல் ஏற்றத்தாழ்வுடன் நடந்து கொண்டோம்.
61 / 224
மாணவா் ஞாயிறு
பிழை உணர்ந்து உம்மிடம் வரும் எங்களை, இறைவா, உமது பெருங்கருணையை முன்னிட்டு மன்னித்தருள மன்றாடுகிறோம்.
62 / 224
மாணவா் ஞாயிறு
பாடல்:
63 / 224
மாணவா் ஞாயிறு
எந்தன் நீதி ஓர் கந்தை அல்லவோ, - யேசுநாதா ஸ்வாமி
என் செய்வேன் மறு தஞ்சம் இல்லையே
வகுப்பறையில் முகங்களையும் மாணவர்களின் மன இயல்பினையும் புரிந்துகொள்ளத் தவறினோம். மாணவர்களுக்கு நிகழும் குழப்பங்கள், இருக்கும் தயக்கங்கள்,
66 / 224
மாணவா் ஞாயிறு
எழும் சந்தேகங்கள், பகிர்ந்துகொள்ளப்படாத வருத்தங்கள், வெளிப்படுத்த முடியாத கசப்புகள், புரிந்துகொள்ளப்படாத நியாயங்கள் என அவர்களின் உள மற்றும் உடல்நிலை அறிந்து
67 / 224
மாணவா் ஞாயிறு
கல்வி புகட்டத் தவறினோம். இறுக்கங்கள் நிறைந்து கிடக்கும் வகுப்பறையில் கற்பித்தலின் வாயிலாக சந்தோசத்தின் சாரங்களைத் திறக்கத் தவறினோம். குழந்தைகள் அனைவரும்
68 / 224
மாணவா் ஞாயிறு
தங்களுக்கான சொந்த நோக்கங்களை, இயல்புகளைக் கொண்ட, சாதிக்கும் திறன் பெற்ற இளம் உயிர்கள் என்பதைக் கருத்தில் கொள்ளாமல், அவர்களை கற்றல் நடவடிக்கைக்காகவே
69 / 224
மாணவா் ஞாயிறு
உருவாக்கப்பட்ட பொம்மைகளாகக் கருதி பாடம் கற்பித்தோம். எங்கள் கற்பித்தல் பணிவிடையில், ஆசிரியர்களுக்கெல்லாம் ஆசிரியரான இயேசு கிறிஸ்துவின் கனிவுடன்
70 / 224
மாணவா் ஞாயிறு
கற்பிக்கும் புதிய முன்மாதிரியைப் பின்பற்ற மறுத்தோம். தவறுகளை உணர்ந்து உம்மிடம் வரும் எங்களை, இறைவா, உமது பேரிரக்கத்தை முன்னிட்டு மன்னித்தருள மன்றாடுகிறோம்.
71 / 224
மாணவா் ஞாயிறு
பாடல்:
எந்தன் நீதி ஓர் கந்தை அல்லவோ, - யேசுநாதா ஸ்வாமி
என் செய்வேன் மறு தஞ்சம் இல்லையே
72 / 224
மாணவா் ஞாயிறு
நடத்துநர்: (பெற்றோர்)
நல்வழியில் நடக்கப் பிள்ளையைப் பழக்கு எனக் கற்பித்திருக்கின்ற கடவுளே! இவ்வுலகில் பிறந்திருக்கும் ஒவ்வொரு குழந்தையும் இப்பூமிக்காகவே பிறந்திருக்கின்றது; இப்பிரபஞ்சத்தின்
73 / 224
மாணவா் ஞாயிறு
தொடர் இயக்கத்திற்குப் பங்காற்றப் போகிறது என்பதை அறியாமல் குடும்பத்தின் குறுகிய எல்லைக்குள் அவர்களின் வாழ்வைச் சுருக்கி அவா்களை வளா்த்து வந்தோம். குழந்தைகளின்
74 / 224
மாணவா் ஞாயிறு
மீது எல்லையற்ற உரிமையுடையவா்களாய் அவா்களை உடைமைகளாகக் கருதி எங்கள் விருப்பங்களை அவா்கள்மேல் திணித்தோம். மதிப்பெண்களை நோக்கி ஒடும் பந்தயக்குதிரைகளாகப்
75 / 224
மாணவா் ஞாயிறு
பிள்ளைகளை நடத்தினோம். திருச்சபைக்கும் திருப்பணிகளுக்கும் திருவசனங்களைக் கற்றுக் கொள்வதற்கும் முதன்மை இடம் தந்து அவா்களைக் கற்பிக்கத் தவறினோம்.
76 / 224
மாணவா் ஞாயிறு
குழந்தைகளின் தவறுகளுக்கும், தோல்விகளுக்கும் தாய் தந்தையராகிய நாங்கள் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டி எங்கள் பொறுப்புகளிலிருந்து தவறிப்போனோம்.
எந்தன் நீதி ஓர் கந்தை அல்லவோ, - யேசுநாதா, ஸ்வாமி
என் செய்வேன்? மறு தஞ்சம் இல்லையே
80 / 224
மாணவா் ஞாயிறு
பிழைமன்னிப்பின் உறுதிமொழிதல்: ஆயா்
81 / 224
மாணவா் ஞாயிறு
"அனைத்து ஆற்றலும் அருளும் மிகுந்த கடவுள் கூறுவது இதுவே:
82 / 224
மாணவா் ஞாயிறு
'உன் குற்றங்களை கார்மேகம்போலும், உன் பாவங்களைப் பனிப்படலம்போலும் அகற்றிவிட்டேன். அமைதி அருளும் கடவுள்தாமே உங்களை முற்றிலும் தூய்மையாக்குவாராக!"
83 / 224
மாணவா் ஞாயிறு
"அவர்தம் திருவுளத்தை நீங்கள் நிறைவேற்றும்படி, எல்லா நன்மைகளையும் செய்வதற்கு உங்களை ஆயத்தப்படுத்தி, இயேசு கிறிஸ்துவின் வழியாகத் தூய ஆவியாரின்
84 / 224
மாணவா் ஞாயிறு
ஆற்றலை அருளி, தமக்கு உகந்ததை உங்களில் நிறைவேற்றுவாராக!"
85 / 224
மாணவா் ஞாயிறு
இறைமக்கள்:
"ஆமென்! ஞானமே உருவாகிய கடவுள் ஒருவருக்கே, இயேசு கிறிஸ்துவின் வழியாய் என்றென்றும் மாட்சி உரித்தாகுக!
நன்றியறிதல் மன்றாட்டு
86 / 224
மாணவா் ஞாயிறு
நடத்துநர்:
ஆண்டவரின் பேரன்பை முன்னிட்டு, மானிடர்களுக்காக அவர் செய்த வியத்தகு செயல்களை முன்னிட்டு, அவர்கள் அவருக்கு நன்றி செலுத்துவார்களாக! (திபா. 107:8)
87 / 224
மாணவா் ஞாயிறு
இறைமக்கள்:
கடவுளின் பெயரை நான் பாடிப் புகழ்வேன்; அவருக்கு நன்றி செலுத்தி, அவரை மாட்சிமைப்படுத்துவேன். (திபா. 69:30)
88 / 224
மாணவா் ஞாயிறு
நடத்துநர்:
எங்கள் வாழ்நாளை நலன்களினால் நிறைவுறச் செய்கின்ற அன்பின் கடவுளே, சமூக அடிமைத்தனத்திலும், மூடப்பழக்கவழக்கங்களிலும் மூழ்கிப்போயிருந்த எம் மூதாதையர்
89 / 224
மாணவா் ஞாயிறு
கல்வியறிவு பெறவும், விடுதலை வாழ்வை சுதந்தரிக்கவும், தியாகத்தோடு சேவை புரிந்த அருள்தொண்டர்களுக்காகவும், திருச்சபைகளுக்காகவும், நிறுவனங்களுக்காகவும்
90 / 224
மாணவா் ஞாயிறு
உமக்கு நன்றி படைக்கின்றோம்.தலைமுறைத் தலைமுறையாக உமது உடன்படிக்கையின் உறுதிமொழிகளை எங்கள் வாழ்வில் நிறைவேற்றியதன் வாயிலாக இன்று நாங்கள்
91 / 224
மாணவா் ஞாயிறு
பெற்றுள்ள எங்கள் திருச்சபை, கன்னியாகுமரிப் பேராயம், திருச்சபைகள், பேராயர், ஆயர்கள், திருப்பணியர், கிறிஸ்தவக் கல்வி வளர்ச்சித்துறை, திருமறைப்பள்ளி,
92 / 224
மாணவா் ஞாயிறு
கல்விக் கூடங்கள், இறையியல், கலை, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லூரிகள், ஆசிரியர்கள், மாணாக்கர் என அனைவருக்காகவும், அவர்கள்
93 / 224
மாணவா் ஞாயிறு
வழியாக நாங்கள் பெற்றுவரும் அருள்வளங்களுக்காகவும், உமது மேன்மைமிக்க செயல்களுக்காகவும் இறைவா, உமக்கு நன்றி செலுத்துகின்றோம்.
94 / 224
மாணவா் ஞாயிறு
பாடல்:
95 / 224
மாணவா் ஞாயிறு
நன்றி என்று சொல்லுகிறோம் நாதா,
நாவாலே துதிக்கிறோம் நாதா,
நன்றி இயேசு ராஜா (2)
96 / 224
மாணவா் ஞாயிறு
நடத்துநர்:
"ஆண்டவர் செய்த வியத்தகு செயல்களை நினைவுகூருங்கள்" எனக் கற்பித்திருக்கின்ற கடவுளே, கடந்த கல்வியாண்டில் நாங்கள் நேர்த்தியாய்க் கற்றுத் தேர்ச்சியடையவும்,
97 / 224
மாணவா் ஞாயிறு
உயர் கல்விக்கான வாய்ப்பைப் பெறவும், உயர்ந்த இலக்கை நிர்ணயித்து, அவைகளை நோக்கி முன்னேறிச் செல்லவும் அருள்செய்தமைக்காக உமக்கு நன்றி செலுத்துகின்றோம்.
98 / 224
மாணவா் ஞாயிறு
சமூகத்தில் நிலவும் பாகுபாடுகளையும் பிரிவினைகளையும் தாண்டி ஒருமைப்பாட்டினை உருவாக்கும் ஆற்றலைக் கல்வியினூடாக எமக்கு வழங்கியமைக்காகவும், மார்க்க பேதங்களையும் வர்க்க
99 / 224
மாணவா் ஞாயிறு
வேறுபாடுகளையும் கடந்து சமத்துவ சமுதாயத்தை ஏற்படுத்த கல்விப் புலங்களில் எமக்கு வாய்ப்பினைத் தந்தமைக்காகவும், இறைவா, உமக்கு நன்றி படைக்கின்றோம்.
100 / 224
மாணவா் ஞாயிறு
பாடல்:
101 / 224
மாணவா் ஞாயிறு
நன்றி என்று சொல்லுகிறோம் நாதா,
நாவாலே துதிக்கிறோம் நாதா,
நன்றி இயேசு ராஜா (2)
102 / 224
மாணவா் ஞாயிறு
நடத்துநர்:
"தாழ்வுற்றிருந்த ருந்த நம்மை நினைவுகூர்ந்தவருக்கு நன்றி செலுத்துங்கள்" என்று கற்றுத்தந்த கடவுளே, நலிவுற்றோர் தம் வாழ்வில் ஏற்றம் பெற, அவர்களின் வாழ்வை,
103 / 224
மாணவா் ஞாயிறு
உரிமையை உறுதி செய்ய நீர் தந்துள்ள மாற்றுத்திறன் படைத்தோருக்கான கல்விக் கூடங்கள், காப்பகங்கள், தொழிற்பயிற்சி நிலையங்கள், மருத்துவ நிலையங்கள்
104 / 224
மாணவா் ஞாயிறு
போன்றவற்றிற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம்.எளியோரின் கல்வி மற்றும் வாழ்க்கைத் தரம் உயரவும், உரிமைகள் கிடைக்கப்பெற்று தற்சார்புடையோராய் நிலைத்து
105 / 224
மாணவா் ஞாயிறு
நிற்கவும் நீர் வழங்கியிருக்கின்ற வளங்களுக்காகவும் நலன்களுக்காகவும் இறைவா, உமக்கு நன்றிகளைப் படைக்கின்றோம்.
106 / 224
மாணவா் ஞாயிறு
பாடல்:
நன்றி என்று சொல்லுகிறோம் நாதா,
நாவாலே துதிக்கிறோம் நாதா,
நன்றி இயேசு ராஜா (2)
107 / 224
மாணவா் ஞாயிறு
நடத்துநர்:
"கடல்மீது மண்ணகத்தை விரித்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்" எனக் கற்பித்திருக்கின்ற கடவுளே! அனைத்து உயிரினங்கள் மற்றும் எல்லாப் படைப்புகளின் வழியாகத் தம்
108 / 224
மாணவா் ஞாயிறு
இயல்புகளை வெளிப்படுத்தி, அவற்றின் வழியாக விண்ணரசின் தகவுகளைக் கற்றுத்தந்தமைக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
படைப்புகளோடு இணைந்து நாங்களும்
109 / 224
மாணவா் ஞாயிறு
உமது மாட்சியைப் பறைசாற்றவும், பொறுப்புள்ள இறைமக்களாய் இப்பூமியைப் பண்படுத்தி, பாதுகாத்து, அதன் பலனை அறுவடை செய்யவும், அடுத்த தலைமுறைக்கென இவ்வுலகைப்
110 / 224
மாணவா் ஞாயிறு
பேணி வளர்க்கவும் எம்மைப் பயன்படுத்துகின்றதற்காக இறைவா, உமக்கு நன்றி செலுத்துகின்றோம்.
111 / 224
மாணவா் ஞாயிறு
பாடல்:
நன்றி என்று சொல்லுகிறோம் நாதா,
நாவாலே துதிக்கிறோம் நாதா,
நன்றி இயேசு ராஜா. (2)
112 / 224
மாணவா் ஞாயிறு
ஆண்டவர் கற்பித்த இறைவேண்டல்:
விண்ணுலகிலிருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக! உமது ஆட்சி வருக! உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவதுபோல மண்ணுலகிலும்
113 / 224
மாணவா் ஞாயிறு
நிறைவேறுக! எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துள்ளதுபோல குற்றங்களை மன்னியும்.
13. யூதா கோத்திரத்தார் அனைவரும், அவர்கள் குழந்தைகளும், அவர்கள் பெண்ஜாதிகளும், அவர்கள் குமாரருங்கூட கர்த்தருக்கு முன்பாக நின்றார்கள்.
118 / 224
மாணவா் ஞாயிறு
14. அப்பொழுது சபையின் நடுவிலிருக்கிற மத்தனியாவின் குமாரனாகிய ஏயெலின் மகனான பெனாயாவுக்குப் பிறந்த சகரியாவின் புத்திரன் யகாசியேல் என்னும்
119 / 224
மாணவா் ஞாயிறு
ஆசாப்பின் புத்திரரில் ஒருவனான லேவியன்மேல் கர்த்தருடைய ஆவி இறங்கினதினால் அவன் சொன்னது:
120 / 224
மாணவா் ஞாயிறு
15. சகல யூதா கோத்திரத்தாரே, எருசலேமின் குடிகளே, ராஜாவாகிய யோசபாத்தே, கேளுங்கள்; நீங்கள் அந்த ஏராளமான கூட்டத்திற்குப் பயப்படாமலும் கலங்காமலும்
121 / 224
மாணவா் ஞாயிறு
இருங்கள் என்று கர்த்தர் உங்களுக்குச் சொல்லுகிறார்; இந்த யுத்தம் உங்களுடையதல்ல, தேவனுடையது.
122 / 224
மாணவா் ஞாயிறு
16. நாளைக்கு நீங்கள் அவர்களுக்கு விரோதமாய்ப் போங்கள்; இதோ, அவர்கள் சிஸ் என்னும் மேட்டுவழியாய் வருகிறார்கள்; நீங்கள் அவர்களை யெருவேல்
123 / 224
மாணவா் ஞாயிறு
வனாந்தரத்திற்கு எதிரான பள்ளத்தாக்கின் கடையாந்தரத்திலே கண்டு சந்திப்பீர்கள்.
124 / 224
மாணவா் ஞாயிறு
17. இந்த யுத்தத்தைப் பண்ணுகிறவர்கள் நீங்கள் அல்ல; யூதா மனுஷரே, எருசலேம் ஜனங்களே, நீங்கள் தரித்துநின்று கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்;
125 / 224
மாணவா் ஞாயிறு
பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள்; நாளைக்கு அவர்களுக்கு எதிராகப் புறப்படுங்கள்; கர்த்தர் உங்களோடே இருக்கிறார் என்றான்.
126 / 224
மாணவா் ஞாயிறு
18. அப்பொழுது யோசபாத் தரைமட்டும் முகங்குனிந்தான்; சகல யூதா கோத்திரத்தாரும் எருசலேமின் குடிகளும் கர்த்தரைப் பணிந்துகொள்ளக் கர்த்தருக்குமுன்பாகத் தாழவிழுந்தார்கள்.
127 / 224
மாணவா் ஞாயிறு
19. கோகாத்தியரின் புத்திரரிலும் கோராகியரின் புத்திரரிலும் இருந்த லேவியர் எழுந்திருந்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை மகா சத்தத்தோடே கெம்பீரமாய்த் துதித்தார்கள்.
128 / 224
மாணவா் ஞாயிறு
பாடல்:
129 / 224
மாணவா் ஞாயிறு
வானம் அகலும் பூமி அழியும்
வேத வசனம் நிலைத்திருக்கும்
பரமன் வேதம் எனது செல்வம்
பரவசம் நிதம் அருளும்
130 / 224
மாணவா் ஞாயிறு
திருமுகப் பாடம் : அப்போஸ்தலர் : 18 : 24 - 28
131 / 224
மாணவா் ஞாயிறு
24. அப்பொழுது அலெக்சந்திரியா பட்டணத்தில் பிறந்தவனும் சாதுரியவானும் வேதாகமங்களில் வல்லவனுமான அப்பொல்லோ என்னும் பேர்கொண்ட ஒரு யூதன் எபேசு பட்டணத்துக்கு வந்தான்.
132 / 224
மாணவா் ஞாயிறு
25. அவன் கர்த்தருடைய மார்க்கத்திலே உபதேசிக்கப்பட்டு, யோவான் கொடுத்த ஸ்நானத்தைமாத்திரம் அறிந்தவனாயிருந்து, ஆவியில் அனலுள்ளவனாய்க் கர்த்தருக்கு
15. நீங்கள் மாம்சத்துச்கேற்றபடி நியாயந்தீர்க்கிறீர்கள், நான் ஒருவனையும் நியாயந்தீர்க்கிறதில்லை;
147 / 224
மாணவா் ஞாயிறு
16. நான் நியாயந்தீர்த்தால், என் தீர்ப்பு சத்தியத்தின்படியிருக்கும்; ஏனெனில் நான் தனித்திருக்கவில்லை நானும் என்னை அனுப்பின பிதாவுமாக இருக்கிறோம்.
148 / 224
மாணவா் ஞாயிறு
17. இரண்டுபேருடைய சாட்சி உண்மையென்று உங்கள் நியாயப்பிரமாணத்திலும் எழுதியிருக்கிறதே.
149 / 224
மாணவா் ஞாயிறு
18. நான் என்னைக்குறித்துச் சாட்சி கொடுக்கிறவனாயிருக்கிறேன், என்னை அனுப்பின பிதாவும் என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறார் என்றார்.
150 / 224
மாணவா் ஞாயிறு
19. அப்பொழுது அவர்கள்: உம்முடைய பிதா எங்கே என்றார்கள். இயேசு பிரதியுத்தரமாக: என்னையும் அறியீர்கள், என் பிதாவையும் அறியீர்கள்; நீங்கள் என்னை
151 / 224
மாணவா் ஞாயிறு
அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிவீர்கள் என்றார்.
152 / 224
மாணவா் ஞாயிறு
20. தேவாலயத்திலே இயேசு உபதேசம்பண்ணுகிறபோது, தருமப்பெட்டியிருக்கும் இடத்தில் இந்த வசனங்களைச் சொன்னார். அவருடைய வேளை இன்னும்
153 / 224
மாணவா் ஞாயிறு
வராதபடியினால் ஒருவனும் அவரைப் பிடிக்கவில்லை.
154 / 224
மாணவா் ஞாயிறு
ஞானப்பாடல் : 401
155 / 224
மாணவா் ஞாயிறு
1.யாரிலும் மேலான அன்பர்,
மா நேசரே;
தாயைப் பார்க்க நல்ல நண்பர்,
மா நேசரே;
மற்ற நேசர் விட்டுப் போவார்,
நேசித்தாலும் கோபம் கொள்வார்,
இயேசுவோ என்றென்றும் விடார்;
மா நேசரே.
156 / 224
மாணவா் ஞாயிறு
2.என்னைத் தேடிச் சுத்தஞ்செய்தார்,
மா நேசரே;
பற்றிக்கொண்ட என்னை விடார்,
மா நேசரே;
இன்றும் என்றும் பாதுகாப்பார்,
பற்றினோரை மீட்டுக்கொள்வார்,
துன்ப நாளில் தேற்றல் செய்வார்;
மா நேசரே.
157 / 224
மாணவா் ஞாயிறு
3. நெஞ்சமே, நீ த்யானம் பண்ணு,
மா நேசரே ;
என்றுமே விடாமல் எண்ணு,
மா நேசரை;
எந்தத் துன்பம் வந்தும் நில்லு,
நேரே மோட்சப் பாதை செல்லு,
யேசுவாலே யாவும் வெல்லு;
மாநேசரே.
158 / 224
மாணவா் ஞாயிறு
4. என்றென்றைக்கும் கீர்த்தி சொல்வோம்,
மா நேசரே;
சோர்வுற்றாலும் வீரங்கொள்வோம்,
மா நேசரே;
கொண்ட நோக்கம் சித்திசெய்வார்,
நம்மை அவர் சேர்த்துக்கொள்வார்,
மோட்ச நன்மை யாவும் ஈவார்;
மா நேசரே.
159 / 224
மாணவா் ஞாயிறு
அருளுரை :
160 / 224
மாணவா் ஞாயிறு
பற்றுறுதி அறிக்கை :
161 / 224
மாணவா் ஞாயிறு
திருத்தூதுவர் பற்றுறுதி அறிக்கை
புதிதாகக் கல்விச் சாலைக்குச் செல்லும் குழந்தைகளுக்கு ஆசி கூறுதல்
(பாடல் பாடப்பெறும்போது புதிதாகப் பாடசாலைக்குச் செல்லும் குழந்தைகளுடன் பெற்றோர் திருப்பீடத்தின் முன் வருவர்)
162 / 224
மாணவா் ஞாயிறு
பாடல்:
உந்தன் ஆசி தாரும்
எந்தன் இயேசு தேவா
தந்தையே நான் பணிகிறேன்
ஞானம் அற்றவன் நானே
ஞானம் தாரும் தேவா
உம்மை அன்றி வழி ஏது
என் கல்வி ஊற்றும் நீரே
163 / 224
மாணவா் ஞாயிறு
திருமறைப்பகுதி: ஆண்டவரின் பேரன்பைப் பற்றி நான் என்றும் பாடுவேன்; நீர் உண்மையுள்ளவர் எனத் தலைமுறைதோறும் என் நாவால் அறிவிப்பேன்.
164 / 224
மாணவா் ஞாயிறு
உன் குழந்தைகள் அனைவருக்கும் ஆண்டவர்தாமே கற்றுத்தருவார்; உன் பிள்ளைகள் நிறைவாழ்வு பெற்றுச் சிறப்புறுவர்.
நான் உனக்கு அறிவு புகட்டுவேன்;
165 / 224
மாணவா் ஞாயிறு
நீ நடக்க வேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்னைக் கண்ணோக்கி, உனக்கு அறிவுரை கூறுவேன்.
நான் கனிவும் மனத்தாழ்மையும்
166 / 224
மாணவா் ஞாயிறு
உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக் கொண்டு என்னிடம் கற்றுக் கொள்ளுங்கள்.
167 / 224
மாணவா் ஞாயிறு
சிறுபிள்ளைகளை இயேசு தொடவேண்டுமென்று அவர்களைச் சிலர் அவரிடம் கொண்டு வந்தனர்.
168 / 224
மாணவா் ஞாயிறு
அவர் அவர்களை அரவணைத்து, தம் கைகளை அவர்கள் மீது வைத்து ஆசி வழங்கினார்.
169 / 224
மாணவா் ஞாயிறு
பெற்றோர்: ஆண்டவரே! உமது வார்த்தையின்படி எங்கள் குழந்தைகளுக்குக் கற்பிக்கவும் அவர்கள் கற்றுக்கொள்ளவும் எங்களையும், நீர் எமக்குத் தந்திருக்கின்ற
170 / 224
மாணவா் ஞாயிறு
இந்தக் குழந்தைகளையும் உம் திருமுன் அர்ப்பணிக்கின்றோம். ஆமென்!
171 / 224
மாணவா் ஞாயிறு
இறைவேண்டல்:
(இறைவேண்டலுக்குப் பின்னர் ஆயர் அல்லது திருப்பணிவிடையாளர் குழந்தைகளின் நெற்றியில் சிலுவை அடையாளமிட்டு ஆசி வழங்கலாம்.
172 / 224
மாணவா் ஞாயிறு
குழந்தைகளுக்கு வசன அட்டையோ, இனிப்போ அல்லது வேறு பரிசோ வழங்கி வாழ்த்தைப் பகிரலாம்)
173 / 224
மாணவா் ஞாயிறு
இறைவாழ்த்து:
இயேசு ஞானத்திலும், உடல் வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்ததுபோல, இந்தக் குழந்தைகள் வளரவும் வாழவும் தூய
174 / 224
மாணவா் ஞாயிறு
ஆவியார் வாயிலாகக் கடவுள் துணை செய்வாராக. ஆமென்!
175 / 224
மாணவா் ஞாயிறு
திருப்பணிக்கொடை படைத்தல்:
176 / 224
மாணவா் ஞாயிறு
திருப்பணிக்கொடைக்கான இறைவேண்டல்:
177 / 224
மாணவா் ஞாயிறு
அறிவிப்புகள்:
178 / 224
மாணவா் ஞாயிறு
பாடல் : கீர்த்தனை : 57
179 / 224