இயேசு எந்தன் வாழ்வின்
இயேசு எந்தன் வாழ்வின் பெலனானார்
எனக்கென்ன ஆனந்தம்
1. எந்தன் வாலிப காலமெல்லாம் எந்தன்
வாழ்க்கையின் துணையானார்
உம் நாமமே தழைத்தோங்க
நான் வாழுவேன் உமக்காக
எந்தன் இதயமே உம்மைப் பாடும்
எந்தன் நினைவுகள் உமதாகும்'
இயேசு எந்தன் வாழ்வின் பெலனானார்
எனக்கென்ன ஆனந்தம்
2. பெருந் தீமைகள் அகன்றோட
பொல்லா மாயைகள் மறைந்தோட
உமதாவியின் அருள் காண
வருங்காலங்கள் உமதாகும்
எந்தன் இதயமே உம்மைப் பாடும்
எந்தன் நினைவுகள் உமதாகும்
இயேசு எந்தன் வாழ்வின் பெலனானார்
எனக்கென்ன ஆனந்தம்
3. இந்த உலகத்தை நீர் படைத்தீர்
எல்லா உரிமையும் எனக்களித்தீர்
உம் நாமமே தழைத்தோங்க
நான் பாடுவேன் உமக்காக
எந்தன் இதயமே உம்மைப் பாடும்
எந்தன் நினைவுகள் உமதாகும்
இயேசு எந்தன் வாழ்வின் பெலனானார்
எனக்கென்ன ஆனந்தம்
4. உந்தன் ஊழியம் செய்திடவே
என்னை உமக்கென தெரிந்து கொண்டீர்
உந்தன் சித்தம் என்னில் விளங்க
என்னை படைக்கிறேன் உமக்காக
எந்தன் இதயமே உம்மைப் பாடும்
எந்தன் நினைவுகள் உமதாகும்
இயேசு எந்தன் வாழ்வின் பெலனானார்
எனக்கென்ன ஆனந்தம்