வானமும் பூமியும் மலை வானமும் பூமியும் மலை பள்ளத்தாக்கும் வாழ்த்துமே ஆண்டவர் நல்லவர் வல்லவர் 1. சந்திர சூரியன் சகலமும் வணங்குதே எந்தனின் இதயமும் இன்பத்தால் பொங்குதே உந்தனின் கிருபையை எண்ணவும் முடியாதே தந்தையும் ஆனவர் நல்லவர் வல்லவர் வானமும் பூமியும் மலை பள்ளத்தாக்கும் வாழ்த்துமே ஆண்டவர் நல்லவர் வல்லவர் 2. பட்சிக்கும் பழமைகள் பரமனை போற்றுதே பறவை இனங்களும் பாடித்துதிக்குதே பக்தரின் உள்ளங்கள் பரவசமடையுதே பரிசுத்த ஆண்டவர் நல்லவர் வல்லவர் வானமும் பூமியும் மலை பள்ளத்தாக்கும் வாழ்த்துமே ஆண்டவர் நல்லவர் வல்லவர் 3. உடல் நலம் பெற்றதால் உள்ளமும் பொங்குதே கடல் போன்ற காருண்யம் கண்டதால் துள்ளுதே கடல் அலை இயேசுவின் பாதம் தழுவுதே திடமான ஆண்டவர் நல்லவர் வல்லவர் வானமும் பூமியும் மலை பள்ளத்தாக்கும் வாழ்த்துமே ஆண்டவர் நல்லவர் வல்லவர்