வளர்ந்தே பெருகுவோம் என்றே உளம் மகிழ்ந்தே புகழ்ந்திட 1. வளர்ந்தே பெருகுவோம் என்றே உளம் மகிழ்ந்தே புகழ்ந்திட வாரீர் தளர்ந்தே சோர்வுறும் கால்களை பலமடைந்தே நடந்திட வாரீர் பெருகுவோம் வளர்ந்து பெருகுவோம் தேவன் அருளும் ஆவியின் அருமையாம் ஒளியில் (வளர்ந்தே பெருகுவோம்) (2) 2. தூய்மையில் தவறிய வேளை நம்மை தூயவர் தூக்கியே எடுத்தார் தாய்மை கரம் கொண்டு மேலும் நம்மை தாங்கியே தினம் அழைத்திடுவார் பெருகுவோம் வளர்ந்து பெருகுவோம் தேவன் அருளும் ஆவியின் அருமையாம் ஒளியில் (வளர்ந்தே பெருகுவோம்) (2) 3. பிரிவினை எழுந்திடும் நேரம் கரிசனையோடவர் இணைத்தார் உரிமையில் ஒருமையில் வளறு -அவர் பரிவுடன் தினம் நடத்திடுவார் பெருகுவோம் வளர்ந்து பெருகுவோம் தேவன் அருளும் ஆவியின் அருமையாம் ஒளியில் (வளர்ந்தே பெருகுவோம்) (2) 4. ஒளியென உலகினில் வந்தார்- நம்மை ஒளியென விளங்கிட அழைத்தார் ஒளி தரும் தீபங்களாக-என்றும் ஒளிர்ந்திட ஓடியே வாரீர் பெருகுவோம் வளர்ந்து பெருகுவோம் தேவன் அருளும் ஆவியின் அருமையாம் ஒளியில் (வளர்ந்தே பெருகுவோம்) (2)