புதுமை வாழ்வில் மலரும் புருவங்கள் மேலே உயரும்
புதுமை வாழ்வில் மலரும்
புருவங்கள் மேலே உயரும்
புது வயல் போலவே
பசுமையே பொலிவுறும்
புதுதளிர் வர வர பயிர்ச்செடி வளர்ந்திடும்
1. காரிருள் கவ்வி மடியும்
கார்புகை கண்ணில் படியும்
காலையில் கடவுளின் புது அருள் மலரும் (2)
கதிரொளி படப்பட இருள் புகை மறைந்திடும் - புதுமை
2. உறவதில் உரசல் மூளும்
உண்மையை பொய்மை சூளும்
உண்மையின் ஆவி யர் பொழிந்திடும் அன்பால்
உறவுகள் சரிபடும் உளமகிழ் மெருகுறும்
3. கல்லறை வாழ்வை மூடும்
கண்களில் கண்ணீர் ஓடும்
கண்ணெதிர் மங்கலாய் தெரிகிறார் இயேசு
கல்லறை பிளந்திட புது உடல் எழுந்திடும்.