கேட்கும் பொழுது தேவன் தருகிறார் கேட்கும் பொழுது தேவன் தருகிறார் தட்டும் பொழுது கதவை திறக்கிறார் தேடும் பொழுதுதான் கண்டடைவீரே தேவ கன்மலை சென்றடைவீரே இதோ இதோ தேவன் அழைக்கிறார் (2) 1. தேவனே அடைக்கலமாம் தேவனே படைக்கலமாம் யாரை கண்டும் அஞ்சமாட்டேனே சத்துருவை கெஞ்ச மாட்டேனே போற்றுவேன் ஏற்றுவேன் ஸ்தோத்திரம் சாற்றுவேன் வெற்றிமேலே வெற்றி கொள்வேனே 2. பாரமெல்லாம் வாங்கிக்கொள்வார் தள்ளாடாமல் தாங்கிக் கொள்வார் கர்த்தர் இயேசு கண்கள் என்றுமே நீதிமானை நோக்கும் என்றுமே மகிழுவேன் புகழுவேன் சாட்சிகள் பகிருவேன் நன்மைக்கெல்லாம் நன்றி சொல்வேனே 3. வாலாக்காமல் தலையாக்குவார் கீழாக்காமல் மேலாக்குவார் கர்த்தர் உன்னை மேன்மையாக்குவார் நித்தம் உன்னை மேய்த்துச் செல்லுவார் பாதைகள் திறக்குது புது வழி பிறக்குது ஸ்தோத்தரித்து ஆர்ப்பரிப்பேனே