மா தூய ஆவி இறங்கும்
மா தூய ஆவி இறங்கும்
விண் தீபம் நெஞ்சில் ஏற்றிடும்
ஞானபிஷேக தைலம் நீ
நல் வரம் ஏழும்
2.மெய் ஜீவன், ஆறுதல் அன்பே
நீர் வார்க்கும் வான தைலமே
உம் ஜோதி வீசி நித்தமும்
ஆன்மாவின் மரள் அகற்றும்.
3.துன்புற்ற நேஞ்சைத் தேற்றவே
ஏராள அருள் பெய்யுமே
மாற்றார் வராமல் ரட்சியும்
சீர் வாழ்வு சுகம்
4.பிதா குமாரனோடு நீ
தரியேகரா யிருக்கறீ
என்றே அறிந்து யாவரும்
பணிந்து போற்றப் போதியும்.