பிதாவே,ஞானம் அன்பினால்
பிதாவே,ஞானம் அன்பினால்
அனைத்தையும் படைத்த
ஏதேனிலே விவாகத்தால்
ஆண்்,பெண்ணையும் இணைத்த
அப்பூரவ ஆசீர்வாதத்தை,
இல்வாழ்க்கையின் நல்லின்பத்தை
இவர்களுக்கும்
2.கானா ஊர் விருந்தாளியே,
இங்கே பரசன்னமாகும்
உம்தன் சம்பூரணத்தாலே
குறைவை நிறைவாக்கும்
இவர்கள் இக இன்பமே
பரத்தின் பாக்யமாகவே
நீர் மாறும்படிச செய்யும்.
3.புனித ஆவி தேவரீர்
இவர்கள் மேலே ஊதும்
உம் தூய்மை அன்பினாலும் நீ
இவர்களைத் தற்காரும்
எப்பாவத்துக்கும் நீங்கியே,
ஒரே சரீரம் போலவே
இவர்கள் வாழசசெய்யும்.
4.த்ரியேகா, நீ் கட்டாவிடில்,
பரயாசம் வீணே ஆகும்
நீர் ஆசீரவதிக்காவிடில்,
இன்பமும் துன்பமாகும்
உம்மால் இணைக்கப்பட்டோரை,
குன்றாத நேசமுள்ளோரை
யார்தான் பிரிக்கக்கூடும்?