ஏதேனில் ஆது மணம்
ஏதேனில் ஆது மணம்
உண்டான நாளிலே
பிறந்த ஆசீர்வாதம்
மாறாதிருக்குமே.
2 இப்போதும் பக்தியுள்ளோர்
விவாகம் தூய்மையாம்:
மூவர் ப்ரசன்னமாவார்
மும்முறை வாழ்த்துண்டாம்.
3 ஆதாமுக்கு ஏவாளைக்
கொடுத்த பிதாவே,
இம்மாப்பிள்ளைக்திப் பெண்ணைக்
கொடுக்க வாருமே.
4 இரு தன்மையும் சேர்ந்த
கன்னியின் மைந்தனே,
இவர்கள் இரு கையும்
இணைக்க வாருமே.
ட மெய் மணவாளனான
தேவ குமாரர்க்கே
சபையாம் மனையாளை
ஜோமுக்கும் ஆவியே.
6 நீரும் இந்நேரம் வந்து
இவ்விரு பேரையும்
இணைத்து, அன்பாய் வாழ்த்தி
மெய்ப் பாக்தியம் ஈந்திடும்.