நேசத்தின் ஆழம் பார்க்கவும்;
இன்னமும் தீரா வாஞ்சையே
என்னில் உண்டாகுகின்றதே.
ஆட்கொண்டவர் நேசம்
ஈடேற்றின நேசம்;
இன்னும் மென்மேலும் வாஞ்சிப்பேன்
உன்னத அன்பைப் போற்றுவேன்.
2. இயேசுவின் சொல்லும் சித்தமும் ,
ஆசையுள்ளோனாய்ச் செய்யவும்;
தேவ ஒத்தாசை நம்புவேன்
ஆவியின் பேரில் சாருவேன்.
3. நாதரின் இன்ப சத்தமும்,
வேதத்தில் கேட்டு நித்தமும்;
ஆத்தும நன்மை நாடுவேன்
நீதியின் பாதை செல்லுவேன்;
4. இயேசுவின் ராஜரீகமும்
ஆசித்த மா செங்கோன்மையும்;
விண்ணிலே தோன்றும் வண்ணமாய்
மண்ணிலுண்டாகும் மேன்மையாய்.