பவனி செல்கின்றார் ராசா பவனி செல்கின்றார் ராசா – நாம் பாடிப் புகழ்வோம், நேசா! (2) அவனிதனிலே மறிமெல் ஏறி ஆனந்தம் பரமானந்தம் (2) பவனி செல்கின்றார் ராசா – நாம் பாடிப் புகழ்வோம், நேசா! (2) 1. எருசலேமின் பதியே! சுரர் கரிசனையுள்ள நிதியே! (2) அருகில் நின்ற அனைவர் போற்றும் அரசே எங்கள் சிரசே! (2) பவனி செல்கின்றார் ராசா – நாம் பாடிப் புகழ்வோம், நேசா! (2) 2. பன்னிரண்டு சீஷர் சென்று நின்று பாங்காய் ஆடைகள் விரிக்க, (2) நன்னயம் சேர் மனுவின் சேனை நாதம் கீதம் ஓத. (2) பவனி செல்கின்றார் ராசா – நாம் பாடிப் புகழ்வோம், நேசா! (2) 3. குருத்தோலைகள் பிடிக்க, பாலர் கும்பல் கும்பலாக நடக்க, (2) பெருத்த தொனியாய் ஓசன்னாவென்று போற்ற மனம் தேற்ற. (2) பவனி செல்கின்றார் ராசா – நாம் பாடிப் புகழ்வோம், நேசா! (2)