எத்தனை நாவால் துதிப்பேன் எந்தன் எத்தனை நாவால் துதிப்பேன் (2) - எந்தன் கர்த்தா உன் கருணையைப் பாடிப் புகழ்ந்து. எத்தனை நாவால் துதிப்பேன். நினைக்க நினைக்க எந்தன் நெஞ்சமெல்லாம் உருகும், (2) நின்னைச் சொல் மாலையால் சூட்டி மகிழும். (2) எத்தனை நாவால் துதிப்பேன். 1. நம்பினோரால்லோர் அறிவார் - எந்தன் தம்பிரானே உந்தன் கம்பீர குணம் (2) அம்பரா உன் அன்பின் அதிசய நடத்துதல் (2) சம்பூரண சவரட்சணை செல்வம் (2) எத்தனை நாவால் துதிப்பேன். 2. பிரார்த்தனை கேட்கும் பெருமானே- இந்த பேதை பலவீனம் பாராதருள் கோனே! (2) சரணென்றுன் செம்பாத மலரடி சேர்ந்தோர் (2) தாவிப் பிடித்துக் கவலை தீர்த்தோனே. (2) எத்தனை நாவால் துதிப்பேன். 3. துணிவாய் என் நேஞ்சே - தீவிரமாய் தொழுது ஆண்டவன் செயல் நினைந்து, (2) எண்ணில் அடங்காது இறைவனின் கிருபை (2) விண்ணவன் சேவையில் வீரமாய்ச் செல்லு. (2) எத்தனை நாவால் துதிப்பேன் (2) - எந்தன் கர்த்தா உன் கருணையைப் பாடிப் புகழ்ந்து. எத்தனை நாவால் துதிப்பேன்.