குணப்படு பாவி குணப்படு, பாவி; தேவ கோபம் வரும் மேவி - இப்போ குணப்படு, பாவி கனப்பொழுதினில் காயம் மறைந்துபோம்; காலமிருக்கையில் சீலமதாக நீ. குணப்படு, பாவி; தேவ கோபம் வரும் மேவி - இப்போ குணப்படு, பாவி 1. கர்த்தனை நீ மறந்தாய் - அவர் கற்பனையைத் துறந்தாய், பக்தியின்மை தெரிந்தாய், - பொல்லாப் பாவவழி திரிந்தாய், புத்திகெட்ட ஆட்டுக் குட்டியே ஓடிவா, உத்தம மேய்ப்பனார் கத்தி யழைக்கிறார். குணப்படு, பாவி; தேவ கோபம் வரும் மேவி - இப்போ குணப்படு, பாவி 2. துக்கமடையாயோ; - பாவி துயரமாகாயோ? மிக்கப் புலம்பாயோ? - மனம் மெலிந்துருகாயோ? இக்கணம் பாவக் கசப்பை யுணராயோ? தக்க அருமறைப் பக்கந் தொடராயோ? குணப்படு, பாவி; தேவ கோபம் வரும் மேவி - இப்போ குணப்படு, பாவி 3. தாவீ தரசனைப்போல் - தன்னைத் தாழ்த்தும் மனாசேயைப்போல், பாவி மனுஷியைப்போல், - மனம் பதைத்த பேதுருபோல், தேவனுக்கேற்காத தீமைசெய்தேனென்று கூவிப் புலம்பு நல் ஆவியின் சொற்படி. குணப்படு, பாவி; தேவ கோபம் வரும் மேவி - இப்போ குணப்படு, பாவி 4. உன்னை நீ நம்பாதே! - இவ் வுலகையும் நம்பாதே, பொன்னை நீ நம்பாதே – எப் பொருளையும் நம்பாதே; தன்னைப் பலியிட்டுத் தாரணி மீட்டவர் நின்னையும் ரட்சிப்பார் அன்னவரைப்பற்று. குணப்படு, பாவி; தேவ கோபம் வரும் மேவி - இப்போ குணப்படு, பாவி