நீயுனக்கு சொந்தமல்லவே நீயுனக்குச் சொந்தமல்லவே! மீட்கப்பட்ட பாவி, நீயுனக்குச் சொந்தமல்லவே. (2) நீயுனக்குச் சொந்தமல்லவே; நிமலன் கிறிஸ்து நாதர்க்கே சொந்தம். நீயுனக்குச் சொந்தமல்லவே! 1. சிலுவை மரத்தில் தொங்கி மரித்தாரே; திருரத்தம் ரத்தம் திரு விலாவில் வடியுது பாரே; வலிய பரிசத்தால் கொண்டாரே; வான மகிமை யுனக்கீவாரே. நீயுனக்குச் சொந்தமல்லவே! 2. இந்த நன்றியை மறந்துபோனாயோ? யேசுவைவிட்டு எங்கேயாகிலும் மறைந்து திரிவாயோ? சந்ததமுனதிதயங் காயமும் சாமி கிறிஸ்தினுடையதல்லவோ? நீயுனக்குச் சொந்தமல்லவே! 3. பழைய பாவத்தாசை வருகுதோ? பிசாசின்மேலே பட்சமுனக்குத் திரும்ப வருகுதோ? அழியும் நிமிஷத் தாசை காட்டியே, அக்கினிக் கடல் தள்ளுவானேன்? நீயுனக்குச் சொந்தமல்லவே! 4. பிழைக்கினும் அவர்க்கே பிழைப்பாயே; உலகைவிட்டுப் பிரியினும் அவர்க்கே மரிப்பாயே, உழைத்து மரித்தும் உயிர்த்த நாதரின், உயர்பதவியில் என்றும் நிலைப்பாய். நீயுனக்குச் சொந்தமல்லவே!