பரனே, திருக்கடைக்கண் பாராயோ பரனே, திருக்கடைக்கண் பாராயோ? – என்றன் பாவத்துயர் அனைத்தும் தீராயோ? பரனே, பரனே, பரனே, பரனே. (2) 1. திறம் இலாத எனை முனியாமல் – யான் செய்த குற்றம் ஒன்றும் நினையாமல் (2) பரனே, பரனே, பரனே, பரனே. 2. மாய வலையில் பட்டுச் சிக்காமல் – லோக வாழ்வில் மயங்கி மனம் புக்காமல். (2) பரனே, பரனே, பரனே, பரனே. 3. அடியேனுக் கருள் செய் இப்போது, – உன தடிமைக் குன்னை அன்றிக் கதி ஏது? (2) பரனே, பரனே, பரனே, பரனே. 4. வஞ்சகக் கவலை கெடுத் தோட்டாயோ? – என்றன் மனது களிக்க வர மாட்டாயோ? (2) பரனே, பரனே, பரனே, பரனே. 5. ஏசுவின் முகத்துக் காய் மாத்ரம் – எனக் கிரக்கம் செய்யும் உமக்கே தோத்ரம் (2) பரனே, திருக்கடைக்கண் பாராயோ? – என்றன் பாவத்துயர் அனைத்தும் தீராயோ? பரனே, பரனே, பரனே, பரனே. (2)