பாரீர் கெத்சமெனே பாரீர்! கெத்சமெனே பூங்காவில் என் நேசரையே பாவி எனக்காய் வேண்டுதல் செய்திடும் சத்தம் தொனித்திடுதே!! 1. தேக மெல்லாம் வருத்தி சோகமடைந்தவராய் தேவாதி தேவன் ஏகசுதன் படும் பாடுகள் எனக்காக பாரீர்! கெத்சமெனே பூங்காவில் என் நேசரையே பாவி எனக்காய் வேண்டுதல் செய்திடும் சத்தம் தொனித்திடுதே!! 2. அப்பா இப்பாத்திரமே நீக்கும் நின் சித்தமானால் எப்படியும் உம் சித்தம் செய்ய என்னை தத்தம் செய்தேன் என்றாரே. பாரீர்! கெத்சமெனே பூங்காவில் என் நேசரையே பாவி எனக்காய் வேண்டுதல் செய்திடும் சத்தம் தொனித்திடுதே!! 3. இரத்தத்தின் வேர்வையாலே மெத்தவுமே நனைந்தே இம்மானுவேலன் உள்ளம் உருகியே வேண்டுதல் செய்தனரே. பாரீர்! கெத்சமெனே பூங்காவில் என் நேசரையே பாவி எனக்காய் வேண்டுதல் செய்திடும் சத்தம் தொனித்திடுதே!! 4. மும்முறை தரை மீதே தாங்கொண்ணா வேதனையால் முன்னவன் தாமே வீழ்ந்து ஜெபித்தாரே பாதகர் மீட்புறவே. பாரீர்! கெத்சமெனே பூங்காவில் என் நேசரையே பாவி எனக்காய் வேண்டுதல் செய்திடும் சத்தம் தொனித்திடுதே!! 5. அன்பின் அருள் மொழியால் ஆறுதல் அளிப்பவர் துன்ப வேளையில் தேற்றுவாரின்றியே நொந்து அலறுகிறார். பாரீர்! கெத்சமெனே பூங்காவில் என் நேசரையே பாவி எனக்காய் வேண்டுதல் செய்திடும் சத்தம் தொனித்திடுதே!! 6. என்னையும் தம்மைப்போல மாற்றும் இம் மா நேசத்தை எண்ணியெண்ணியே உள்ளம் கனிந்து நான் என்றும் புகழ்ந்திடுவேன். பாரீர்! கெத்சமெனே பூங்காவில் என் நேசரையே பாவி எனக்காய் வேண்டுதல் செய்திடும் சத்தம் தொனித்திடுதே!!