மாறிடார் எம்மா நேசரே
1. மாறிடார் எம்மா நேசரே - ஆ
மாறாதவர் அன்பெந்நாளுமே
கல்வாரி சிலுவை மீதிலே
காணுதே இம்மா அன்பிதே.
ஆ! இயேசுவின் மகா அன்பிதே
அதின் ஆழம் அறியலாகுமோ
இதற்கிணை யேதும் வேறில்லையே
இணை யேதும் வேறில்லையே.
2. பாவியாக இருக்கையிலே - அன்பால்
பாரில் உன்னை தேடி வந்தாரே
நீசன் என்றுனைத் தள்ளாமலே
நேசனாக மாற்றிடவே.
ஆ! இயேசுவின் மகா அன்பிதே
அதின் ஆழம் அறியலாகுமோ
இதற்கிணை யேதும் வேறில்லையே
இணை யேதும் வேறில்லையே.
3. உள்ளத்தால் அவரை தள்ளினும் - தம்
உள்ளம் போல் நேசித்ததினால்
அல்லல் யாவும் அகற்றிடவே
ஆதி தேவன் பலியானாரே.
ஆ! இயேசுவின் மகா அன்பிதே
அதின் ஆழம் அறியலாகுமோ
இதற்கிணை யேதும் வேறில்லையே
இணை யேதும் வேறில்லையே.
4. ஆவியால் அன்பைப் பகர்ந்திட - தூய
தேவனின் விண்சாயல் அணிய
ஆவியாலே அன்பைச் சொரிந்தார்
ஆவலாய் அவரைச் சந்திக்க.
ஆ! இயேசுவின் மகா அன்பிதே
அதின் ஆழம் அறியலாகுமோ
இதற்கிணை யேதும் வேறில்லையே
இணை யேதும் வேறில்லையே.
5. நியாய விதி தினமதிலே - நீயும்
நிலையாகும் தைரியம் பெறவே
பூரணமாய் அன்பு பெருக
புண்ணியரின் அன்பு வல்லதே.
ஆ! இயேசுவின் மகா அன்பிதே
அதின் ஆழம் அறியலாகுமோ
இதற்கிணை யேதும் வேறில்லையே
இணை யேதும் வேறில்லையே.
6. பயமத்தை நீக்கிடுமே – யாவும்
பாரினிலே சகித்திடுமே
அது விசுவாசம் நாடிடுமே
அன்பு ஒருக்காலும் ஒழியாதே.
ஆ! இயேசுவின் மகா அன்பிதே
அதின் ஆழம் அறியலாகுமோ
இதற்கிணை யேதும் வேறில்லையே
இணை யேதும் வேறில்லையே.