என்னை மீட்ட அன்பே என்னை மீட்ட அன்பே சிலுவையின் அன்பே உம்முடையோன் யான். (2) 1. பாவியான என்னை மீட்பதற்காக (2) பார சழலுபை சுமந்தீர் கல்வாரி மலைதனிலே சிலுவைதனில் மரித்தீர். 2. மறு ஜெனனம் என்னில் நல்கியதாலே (2) வெறுத்தேன் ஜடத்தின் சுகம் வெறுத்தேன் பாவ சுகம் வெறுத்தேன் லோக சுகம். 3. உம்முடன் சேர என்தனை ஈந்தேன் (2) பர்வத சிகரத்திலும் பள்ளதாக்குகள் தனிலும் வெள்ளத்தின் மத்தியிலும். 4. இயேசுவே என்னை நித்தமும் நடத்தும் (2) பாலை வனந்தனிலும் பாட்டுகள் பாடிக் கொண்டும் நித்தியம் சேரும் வரையும்.