ஓ இயேசு உமதன்பு எத்தனை பெரியது
ஓ இயேசு உமதன்பு
எத்தனை பெரியது
ஆகாயம் பூமி மலை ஆழிகளுக்
கெல்லாம் பெரியது. (2)
ஓ இயேசு உமதன்பு
1. அளவில்லா ஆனந்தத்தால் அகம் நிறைந்தது
ஆண்டவர் காரியங்கள் அதிகம் சிறந்தது
அன்றாடம் காலை மாலைகளிலும்
துதிக்க உயர்ந்தது (2)
ஓ இயேசு உமதன்பு
2. சங்கட சமயங்களில் மங்கியே வாடுகிறேன்
துங்கனே இரங்குமென ஏங்கியே நாடுகிறேன்
பங்கமில்லாமல் பதிலளிப்பேன்
என்றதால் பாடுகிறேன். (2)
ஓ இயேசு உமதன்பு
3. இருளாம் பள்ளத்தாக்கில் மருகியே நடந்தாலும்
அருமெந்தன் மேய்ப்பராய் அருகிலிருப்பதாலும்
கருணையாயென்னைக் கரம் பிடித்தே
கர்த்தரே காப்பதாலும் (2)
ஓ இயேசு உமதன்பு
4. குறை உள்ளவ னானாலும் கூடவே இருக்கிறீர்
நிறைவாம் புல் தரைகளில் மெதுவாய் நடத்துகிறீர்
இறைவனாம் இயேசு எல்லாவற்றிலும்
திருப்தியாக்குகிறீர் (2)
ஓ இயேசு உமதன்பு
5. தேவனுடைய வீட்டில் சித்தபடி துதிப்பேன்
ஏக இதயத்துடனே என்றுமதை மதிப்பேன்
ஆராதிக்க அருகராம் இயேசு
அல்லேலூயா ஆமென் (2)
ஓ இயேசு உமதன்பு
எத்தனை பெரியது
ஆகாயம் பூமி மலை ஆழிகளுக்
கெல்லாம் பெரியது. (2)
ஓ இயேசு உமதன்பு