அன்பின் தெய்வமான நேசர்க்கு ஈடுண்டோ.
1. பாவியை இரட்சிக்க இப்பாரினில் வந்தார்
சாபமதை போக்க மாபாடு அடைந்தார்
அழகுமில்லாது சௌந்தரியம் இழந்தார்
பாடுகளை ஏற்று நம் துக்கம் சுமந்தார்.
சிலுவையில் மாண்ட என் ஏசு போலுண்டோ
அன்பின் தெய்வமான நேசர்க்கு ஈடுண்டோ.
2. வியாதிதனை நீக்க வாரால் அடிபட்டார்
வேதனையும் தீர்க்க விலாவில் குத்துண்டார்
வேந்தராம் என் ஏசு மாதியாகியுமானார்
மாந்தர் என்றும் வாழ்ந்திட தன் ஜீவனும் ஈந்தார்.
சிலுவையில் மாண்ட என் ஏசு போலுண்டோ
அன்பின் தெய்வமான நேசர்க்கு ஈடுண்டோ.
3. சாவுதனை வென்று மகிமை அடைந்தார்
காயம்தனைக் காண்பித்து உன்னை அழைக்கிறார்
பாவியே இன்றுந்தன் உள்ளம் உருகாயோ
பாவம் விட்டு ஆண்டவரிடம் நீ வாராயோ
சிலுவையில் மாண்ட என் ஏசு போலுண்டோ
அன்பின் தெய்வமான நேசர்க்கு ஈடுண்டோ.