தேவனே உமது கிருபையின் படி
தேவனே உமது கிருபையின் படி
மா பாவி எனக்கு இரங்கும் (2)
1. உமது மிகுந்த இரக்கத்தின்படி
என் மீறுதல்களை மன்னியும்
அக்கிரமம் நீங்க முற்றிலும் கழுவி
என் பாவமற சுத்தம் செய்யும். (2)
தேவனே உமது கிருபையின் படி
மா பாவி எனக்கு இரங்கும் (2)
2. மீறுதல்களை அறிந்திருக்கிறேன்
வருந்துகிறேன் எந்தன் தேவா
தேவரீர் ஒருவருக்கே விரோதமாய் பாவம் செய்து
உம் மகிமையை இழந்தேன். (2)
தேவனே உமது கிருபையின் படி
மா பாவி எனக்கு இரங்கும் (2)
3. இதோ நான் துர்க்குணத்தில் உருவானேன் அன்று
தாய் பாவத்தில் கற்பம் தரித்தாள்
உள்ளத்தில் உண்மை இருக்க விரும்புகிறீர்
முற்றிலும் கழுவிடும் தேவா. (2)
தேவனே உமது கிருபையின் படி
மா பாவி எனக்கு இரங்கும் (2)
4. தேவனே சுத்த இருதயத்தை என்னில்
சிருஷ்டித்து ஆவியை ஊற்றும்
உமது சமூகத்தைவிட்டு தள்ளாமல்
பரிசுத்த ஆவியை ஊற்றும் - பெற்று
நிதம் வழி நடத்தும்.
தேவனே உமது கிருபையின் படி
மா பாவி எனக்கு இரங்கும் (2)