உம்மை நம்பி உந்தன் பாதம்
உம்மை நம்பி உந்தன் பாதம்
உறுதியாய்ப் பற்றிக் கொண்டோம்
ஒருபோதும் கைவிடமாட்டீர் (2)
1. கண்ணீரைத் துடைத்து
கரங்களைப் பிடித்து
காலமெல்லம் காத்துக் கொண்டீர். (2)
என்னை காலமெல்லம் காத்துக் கொண்டீர்.
உம்மை நம்பி உந்தன் பாதம்
உறுதியாய்ப் பற்றிக் கொண்டோம்
ஒருபோதும் கைவிடமாட்டீர்.
2. மகனாக மகளாக
அப்பா என்றழைக்கும்
உரிமையை எனக்குத் தந்தீர்
ஐயா உரிமையை எனக்குத் தந்தீர்.
உம்மை நம்பி உந்தன் பாதம்
உறுதியாய்ப் பற்றிக் கொண்டோம்
ஒருபோதும் கைவிடமாட்டீர்.
3. அச்சாரமாய் முத்திரையாய்
அபிஷேக வல்லமையை
அடிமைக்குத் தந்தீரே (2)
ஐயா அடிமைக்குத் தந்தீரே.
உம்மை நம்பி உந்தன் பாதம்
உறுதியாய்ப் பற்றிக் கொண்டோம்
ஒருபோதும் கைவிடமாட்டீர்.
4. குருடர்கள் பார்த்தார்கள்
செவிடர்கள் கேட்டார்கள்
முடவர்கள் நடந்தார்கள்.
ஐயா முடவர்கள் நடந்தார்கள்.
உம்மை நம்பி உந்தன் பாதம்
உறுதியாய்ப் பற்றிக் கொண்டோம்
ஒருபோதும் கைவிடமாட்டீர்.