உனக்காக நான் மரித்தேனே எனக்காக நீ என்ன செய்தாய் (2)
2. உலக மேன்மை அற்பம் என்றும் உலக ஆஸ்தி குப்பை என்றும் (2) உள்ளத்தினின்று கூருவாயோ? ஊழியம் செய்ய வருவாயா (2) --- உனக்காக 3. மேய்ப்பன் இல்லாத ஆடுகள் போல் மேய்கிறார் பாவப்புல் வெளியில் (2) மேய்ப்பன் இயேசுவை அறிந்த நீயும் மேன்மையை நாடி ஒடுகின்றாயோ? (2) --- உனக்காக 4. இயேசு என்றால் என்ன விலை என்றே கேட்டிடும் எத்தனை பேர் (2) பிள்ளைகள் அப்பம் கேட்கின்றனர் ஜீவ அப்பம் கொடுப்பாயா? (2) --- உனக்காக 5. ஐந்து சகோதரர் அழிகின்றாரே யாரையாவது அனுப்பிடுமே (2) யாரை நான் அனுப்பிடுவேன் யார்தான் போவார் எனக்காக (2) --- உனக்காக