விசுவாசியே நீ பதறாதே விசுவாசியே நீ கலங்காதே விசுவாசத்தால் நீதிமான் இன்றும் என்றும் பிழைப்பான்
2. திருச்சபையே நீ கிரியை செய்வாய் திவ்விய அன்பில் பெருகிடுவாய் தலைமுறையாய் தலைமுறையாய் தழைத்திட அருள் புரிவாய் --- விசுவாசியே 3. நெஞ்சமே நீ அஞ்சிடாதே தஞ்சம் இயேசு உன் அரணே தம் ஜனத்தை சீக்கிரமாய் தம்முடன் சேர்த்துக் கொள்வார் --- விசுவாசியே 4. மேகம் போன்ற வாக்குத்தத்தம் சூழ நின்றே காத்திருக்க விசுவாசத்தால் உரிமை கொள்வாய் விரைந்து முன் ஏகிடுவாய் --- விசுவாசியே