1. ஒருநாள் உம் தயை கண்டேனையா அந்நாளென்னை வெறுத்தேனையா உம்தயை பெரிதையா - என் மேல் உம் தயை பெரிதையா --- அன்பே 2. பரலோகத்தின் அருமைப் பொருளே , நரலோகரி லன்பேனையா ? ஆழம் அறிவேனோ - அன்பின் ஆழம் அறிவேனோ --- அன்பே 3. அலைந்தேன் பலநாள் உமையுமறியா மறந்தே திரிந்த துரோகியை அணைத்தீர் அன்பாலே - எனையும் அணைத்தீர் அன்பாலே --- அன்பே 4. பூலோகத்தின் பொருளில் மகிமை அழியும் புல்லின் பூவைப் போல வாடாதே ஐயா - அன்பு வாடாதே ஐயா --- அன்பே 5. இப்பாரினில் உம் அன்பின் இனிமை இயம்பற் கியலாதாகில் யான் இசைக்கவும் எளிதாமோ - பரத்தில் இசைக்கவும் எளிதாமொ --- அன்பே