அற்புத அன்பிதே பொற்பரன் இயேசுவே
பெற்ற பிதாவிலும் உற்றவர் எனக்கே
உம்மை போற்றி ஏற்றி புகழ்ந்திடவே
துதி சாற்றி ஊற்றி உள்ளம் மகிழ்வேன் – 2
அன்பு பெருகும் சுனை நீரல்வோ
அம்பு விதனில் அரசே மாறா நின்
தயவும் மா நேசமதும் மறப்பேனா – 2
1. நாலாம் ஜாமத்திலே நடுக்கடல் மீதே
நடந்து சீஷரைத் தேற்றிய ஏசுவே
எந்தன் நாவாய்ப் பொங்கும் அலைகடந்தே
கரை நாடி சேரத் துணை புரிவீர் – அன்பு
2. மெல்கிசேதேக்கினைப் போன்ற குமாரனே
நல்குவீர் தாழ்மையும் நின்சித்தம் செய்யவே
தாரும் தூய ஆவி அனுக்கிரகமே – இன்று
மீயுமென்னில் புது பெலனே – அன்பு
3. ஒளியில் இலங்கும் சுத்தர்களுடனே
எளியோன் எனக்கோர் பங்களித்தவரே
பரிசுத்தம் நான் பெறச் செய்யுமே
சுதந்திரம் நான் பெறச் செய்யுமே – அன்பு
4. சீயோனின் சிறப்பே அன்பின் பூரணமே
சிந்திக்க ஆனந்த கண்ணீh பெருகுதே
அதை எண்ணி நிறைந்தன்பினால்
இன்றும் எண்ணமில்லா துதி சொல்லுவேன் – அன்பு