ஆயிரம் பதினாயிரம் பேர்களிலும்
சிறந்தவர் என் இயேசு
ப+மி அனைத்துக்கும் இராஜாவே
கோடி கோடி ஸ்தோத்திரம்… – 2
இரக்கத்தில் ஜஸ்வரியமுள்ளவரே
உருக்கம் நிறைந்தவர் நீர்… – 2
இருக்கும் இடம் தேடி வந்தீரே
இரட்சிப்புத் தந்தவர் நீர்… – 2 (ஆயிரம்…)
நித்திய ஜீவனை எமக்குத் தர
ஜீவனைத் தந்தவர் நீர்… – 2
நிறந்தர அமைதியை நான் பெறவே
நொறுக்கப்பட்டவர் நீர்… – 2 (ஆயிரம்…)
அன்னாளின் கண்ணீர் துடைத்தவரே
ஆகாரின் துயர் துடைத்தீர்… – 2
என் வாழ்வில் இன்னல்கள் அகற்றியதால்
என்றென்றும் ஸ்தோத்திரம் ஐயா… – 2 (ஆயிரம்…)