இந்தக் கடைசி நாட்களில்
சந்தோஷம் நம்பிக்கை உண்டு
ஆச்சர்யமாம் சத்தியமாய்
இராஜாதி ராஜாவாய் ஆளுவார்,
அவர் வருவார் சீக்கிரமாய் வருவார்
ஆவலோடு எதிர்பார்க்கிறோம்
காலையிலோ மாலை நேரத்திலோ
வரவே வருவார் அறிவோம்
வானத்திலும் ப+மியிலும்
நாம் காணும் அடையாளங்கள்
அவர் வருகை சமீபம்
எனவே சாட்சியாய் கூறுது – அவர்
கிறிஸ்துவுக்குள் மரித்த
கணக்கில்லாத பக்தர்கள்
ஆகாயத்தில் பறந்துபோய்
அவருடன் என்றென்றும் ஜீவிப்பார் – அவர்
உயிரோடிருக்கிற நாமும்
நம் தேவனைச் சந்திப்போமே
இந்நம்பிக்கை வீண் அல்லவே
நாம் ஒருவர் ஒருவரை தேற்றுவோம் – அவர்