உன்னதங்களிலே இருப்பவரை-நாம் ஆராதிப்போம்
உன்னதமான தேவனையே-நாம் ஆராதிப்போம்
நல்லவரை நாம் ஆராதிப்போம்
வல்லவரை நாம் ஆராதிப்போம்
மகிமையான தேவனையே-நாம் ஆராதிப்போம்
மகத்துவமான ராஜனையே-நாம் ஆராதிப்போம்
1. இருக்கின்றவராய் இருக்கின்றவரை நாம் ஆராதிப்போம்
இருளில் நம்மை மீட்டவரை – நாம் ஆராதிப்போம்
இரட்சகரை நாம் ஆராதிப்போம்
நித்தியரை நாம் ஆராதிப்போம்
சகலமும் படைத்த சத்தியரை-நாம் ஆராதிப்போம்
அகிலம் போற்றும் ஆண்டவரை-நாம் ஆராதிப்போம்
2. ஆதியிலிருந்தே இருந்தவரை-நாம் ஆராதிப்போம்
ஆவியில் நம்மை உயிர்ப்பித்தவரை நாம் ஆராதிப்போம்
அடைக்கல தேவனை ஆராதிப்போம்
அதிசய தேவனை ஆராதிப்போம்
நமக்காய் மரித்து உயிர்த்தவரை நாம் ஆராதிப்போம்
நமக்காய் மீண்டும் வருபவரை-நாம் ஆராதிப்போம்