எண்ணி எண்ணி துதி செய்வாய்
எண்ணடங்காத கிருபைகளுக்காய்
இன்றும் தாங்கும் தம் புயமே
இன்ப இயேசுவின் நாமமே
உன்னை நோக்கும் எதிரியின்
கண்ணின் முன்பே பதராதே
கண்மணிபோல் காக்கும் கரங்களில்
உன்னை மூடி மறைத்தாரே
யோர்தான் புரண்டு வரும்போல்
எண்ணற்ற பாரங்களோ
எலியாவின் தேவன் எங்கே
உந்தன் விசுவாச சோதனையில்
சோர்ந்திடும் நேரத்தில்
சார்ந்திட தேவன் உண்டே
உலகத்தில் இருப்பவனிலும்
உன்னில் இருப்பவர் பெரியவரே
ஓட்டத்தை முடித்திட
கிரீடத்தை சூடிட
உதவிடுவார் உயர்த்திடுவார்
உந்தன் கண்ணீர் மாறிடுமே
உனக்கெதிராகவேஆயுதம் வாய்க்காதே
உன்னை அழைத்தவர்
உண்மை தேவன்
அவர் தாசர்க்கு நீதியவர்