என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர்
என் உயிரே நான் உம்மை துதிப்பேன் – 2
என் உயிரான உயிரான உயிரான இயேசு – 2
உலகமெல்லாம் மறக்குதையா
உணர்வு எல்லாம் இனிக்குதையா – 2
உம் நாமம் துதிக்கையிலே இயேசையா
உம் அன்பை ருசிக்கையிலே
உம் திருநாமம் உலகத்திலே
உயர்ந்த அடைக்கல அரண்தானே – 2
நீதிமான்கள் அதற்குள்ளே ஓடி
சுகமாய் இருப்பார்கள்
உம் திரு வசனம் எனக்கு என்றும்
உயிர் கொடுக்கும் நல்ல உணவாகும்
அனுதினம் நான் அதையே நினைத்து
தியானித்து மகிழ்ந்திடுவேன்