சத்திய வேதத்தைத் தினம் தியானி சத்திய வேதத்தைத் தினம் தியானி சகல பேர்க்கும் அதபிமானி. உத்தம ஜீவிய வழிகாட்டும், உயர்வானுலகில் உனைக்கூட்டும் சத்திய வேதத்தைத் தினம் தியானி சகல பேர்க்கும் அதபிமானி. 1. வாலிபர் தமக்கூண் அதுவாகும்; வயோதிபர்க்கும் அதுணவாகும்; பாலகர்க்கினிய பாலும் அதாம்; படிமீ தாத்ம பசி தணிக்கும். சத்திய வேதத்தைத் தினம் தியானி சகல பேர்க்கும் அதபிமானி. 2. சத்துருப் பேயோ டமர்புரியும் தருணம் அதுநல் ஆயுதமாம்; புத்திரர் மித்திரரொடு மகிழும் பொழுதும் அது நல் உறவாகும். சத்திய வேதத்தைத் தினம் தியானி சகல பேர்க்கும் அதபிமானி. 3. புலைமேவிய மானிடரிதயம் புனிதம் பெறுதற்கது மருந்தாம், நிலையா நரர் வாணாள் நிலைக்க நேய காய கற்பம் அதாம். சத்திய வேதத்தைத் தினம் தியானி சகல பேர்க்கும் அதபிமானி. 4. கதியின் வழி காணாதவர்கள் கண்ணுக்கரிய கலிக்கம் அது; புதிய எருசலேம் பதிக்குப் போகும் பயணத் துணையும் அது; சத்திய வேதத்தைத் தினம் தியானி சகல பேர்க்கும் அதபிமானி. 5. மாந்தர் ரக்ஷிப்படையும் வழி வழுத்தும் தேவ வார்த்தை அது, வேந்தர்அமைச்சர் முதலெவர்க்கும் விசித்த பிரமாண மும் அதுவே. சத்திய வேதத்தைத் தினம் தியானி சகல பேர்க்கும் அதபிமானி.